பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


நன்னெறி கயவுரை

மலரால் பொலிவு பெற்ற கூந்தலை உடைய பெண்ணே | பொலிவுள்ள கைகள் மிக்க சுவை யுணவை நாக்கிற்கு நயமாகத் தருவது புகழ் பெறவா? (இல்லை; இயற்கை யாய் நடைபெறுகிறது.) அதுபோல், குற்றம் அற்ற நல்லோர், எப்போதும் தம்மிடம் இச்சகம் பேசாதவரிடத்தும் சென்று இயற்கையாய்ப் பொருளுதவி செய்வர்.

1

நல்ல நெற்றி யுடையவளே! சிவனுக்கு விருப்பமானது தீய நோக்குடன் மன்மதன் எய்த மலர் அம்பு அன்று; நன்மனத்துடன் சாக்கிய நாயனார் எறிந்த (அர்ச்சனைக்) கல்லே விருப்பமானது.அதுபோல, குற்ற மில்லா நன்மனத் தர் கண்டிக்கும் கடுஞ்சொல் நன்மைதரும். தீய நெஞ்சின ரின் இன்சொல் வஞ்சகம் செய்யும்.

2

பெரிய தங்கக் குன்றால் செய்தாற் போன்ற மார்பகம் உடையவளே! பசுவின் பாலை அதன் கன்றின் உதவியுடன் கறந்து கொள்வர். அதுபோல, தங்கட்கு உதவாதவர் கையிலிருந்து தாமொன்று பெற வேண்டின், அவர்கட்கு வேண்டியவரைக் கொண்டு பெற்றுக் கொள்க.

3

பிறர்க்கு உதவாத கரிய கடல் நீரை மேகம் போய்மொண்டு வந்து மழையாகப் பெய்து கொடுப்பது போல், பிறர்க்கு உதவாதவரின் பெரிய செல்வம், பிறர்க்கு உதவும் வேறுயாராவது ஒருவர் மூலம் பெறப்ப்ட்டுத் தரப்படும்.

4

மலர்க் கூந்தலாளே! நெல்லின் உமி சிறிது பிரிந்த பின் முன்புபோல் மீண்டும் சேர்த்தாலும் ஒட்டுறுதிநிலை போய்விடல்போல, பிரியாத இருவர் மாறுபட்டுப் பிரிந்து விடின், மீண்டும் சேர்ந்தாலும், காணுங்கால் அவர்களின் நட்பின் சிறப்பு அற்ப மாகவே தோன்றும்.

5