சுதந்திதாக • 36 வந்தால் தொடர்ந்து பாடம் சொல்லிக் கொடுப்பது; பிடிக்காவிட்டால் அந்த வீட்டுக்குப் போகாமலே இருந்து விடுவது. இதனால் என்ன நஷ்டம் வந்து விடப் போகிறது? என்று நினைத்தான் அவன். முதல் நாளே கைலாசத்துக்குப் புரிந்து போயிற்று, ராமமூர்த்தி என்ற அந்தப் பையன் சுத்த மண்டுகம் என்று. ‘இவன் மண்டையில் பாடங்களைத் திணித்து அவை அங்கேயே தங்கியிருந்து சமயத்துக்கு முன் வந்து உதவும் படி செய்வது என்பது பகீரத சாதனையாகத்தான் இருக்கும்’ என்று அவன் நினைத்தான். இன்றோடு நின்று விடலாமா? அல்லது ஒரு வாரம் பொறுத்துப் பார்க்கலாமா? என்று கைலாசம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில்தான் வீட்டினுள்ளிருந்து புறப்பட்ட குரல் ஒன்று அவன் காதுகளில் இனிமை புகுத்தியது. - "தம்பிக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிற வாத்தியாரை நான் பார்த்து விட்டு வருகிறேன்” என்று பேசியது ஒரு பெண்தான். “ஏ கல்யாணி, நீ இங்கே வாடி!” என்று பெரிய அம்மாள் ஒருத்தி அதட்டியும் கேளாமல் அந்தப் பெண் முன்னேறிக் கொண்டிருந்தாள். கைலாசம் வாசற்படியின் பக்கம் பார்வை எறிவதற்கும் அவள் அந்த இடத்தில் வந்து நிற்பதற்கும் நேரப் பொருத்தம் சரியாக இருந்தது. அவசரமாக வந்து நின்ற கல்யாணி அவனைப் பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்து விட்டாள். அவள் கண்கள் அந்த உணர்ச்சியை நன்கு எடுத்துக்காட்டின. 'இவள் ஏன் இப்படி அதிசயிக்க வேண்டும்? என்று அவள் முகத்தையே கவனித்த கைலாசம் நினைத்தான்,
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/38
Appearance