இக்கூட்டத்தில் கலந்து கொண்ட “ஞான பீடம்” பரிசு வழங்கும் குழுவின் தலைவராக பணியாற்றிய திரு. கே. ஏ. மணவாளன் அவர்களும், ஞானியாரடிகள் வாழ்க்கை பற்றியும் அவரது தமிழ்ச் சமயப் பணி பற்றியும் மிக ஆழமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார்.
ஞானியாரடிகள் பற்றி திருஜெயகாந்தன் அவர்களிடம் ஓர் கட்டுரை கேட்டதற்கு ஞானியார் சுவாமிகளை தன்னை விட நன்றாக அறிந்த கே. ஏ. மணவாளன் ஐயாவிடம் வாங்கி கட்டுரைத் தொகுதியில் சேருங்கள், சிறப்பாக இருக்கும் என்று கூறினார். அவரின் விருப்பத்தை ஏற்று, கட்டுரையை மணவாளன் ஐயாவிடம் பெற்று “தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” புத்தகத்தில் இணைத்துள்ளேன்.
ஞானியாரடிகள் மடத்திற்குச் சென்று புகைப்படங்கள் எடுத்ததோடு, மடத்தின் குருமூர்த்திகளின் சமாதி தோட்டத்திற்கு சென்று ஞானியாரடிகள் நினைவிடத்தையும் நிழற்படம் எடுத்து இப்புத்தகத்தில் இணைத்துள்ளேன். கவாமிகள் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணியைப் பற்றி விரிவாக பல தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ளனர். பல புத்தகங்களில் ஞானியாரடிகள் பற்றி வெளிவந்த கட்டுரைகளை இப்புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளேன். இந்நூலை சிறப்பாக கொண்டுவர ஏதுவான புத்தகப்பட்டியலை நன்றியுடன் தனியாக இந்நூலில் இணைத்துள்ளேன். தமிழ் சமுதாயத்திற்கு கடந்த நூற்றாண்டில் ஞானியாரடிகள் ஆற்றிய தமிழ்ப்பணியும், சைவப் பணியும் இன்று வரை ஆலமரம்போல் தழைத்து வேருன்றியுள்ளன என்பதை இப்புத்தகத்தில் உள்ளசெய்திகள் நன்கு புலப்படுத்தும். தமிழ் மொழியானது தற்காலக் கணினியையும், தன் வயப்படுத்தி வேகமாக வளர்கிறது என்பது கண்கூடு. மூன்று சங்கங்களைக் கண்ட தமிழ் மொழி இன்று கணினியிலும் நான்காவது சங்கமாக வளர்கிறது.
“தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்” எனும் இக்கட்டுரைத் தொகுதியை தயாரிக்கும் நேரத்தில் “முதல் குடி அரசு சில பிரச்சினைகள் விமர்சனங்கள்" என்ற நூல் எனது நண்பர் மூலம் கிடைத்தது.
இப்புத்தகம் முருகு இராசாங்கம் எம்.ஏ. அவர்ளால் எழுதப்பட்டுள்ளது. கும்பகோணத்திலுள்ள, செங்குயில் பதிப்பகம் அதை 1988ல் வெளியிட்டிருக்கிறது. முதல் ‘குடி அரசு’ இதழை