பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - क्लल्लढ़ें

క్ట్ర

ஒக்க உடன் உண்டிருந்து பின்னர் நெஞ்சினால் பிழை இலாள்" என்ற ஸ்ர்டிபிகேட் பெற்று பத்தினிமார் பட்டியலிலே அழியாத இடம் பெற்று விட்டாளே தாடிமுனியின் இளம் மனைவி, அவளைப் பற்றி நான் இங்கே குறிப்பிட வில்லை என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான் இங்கு அறிமுகம் செய்ய விரும்புவது இரட்டைச் சடைக்காரி, ஐடெக்ஸ் விழிக்காரி, லிப்ஸ்டிக் இதழ்க்காரி, க்யூட் கைகாரி ஹைஹீல்டு ஷூக்காரி ஒருத்தியைத்தான்.

'நண்பரே, உங்களோடு போட்டியிட்டு ஒரு கதாசிரியனாக மாறும் எண்ணம் எனக்குக் கிடையவே கிடையாது. ஜோராக வர்ணனை பண்ணுவதில் ஈடுபட்டு விட்டேனே என்ற்ால், பெண்ணைப் பற்றி எண்ணப் புகழ்ந்தால் யாருக்குத் தான் குஷி கிளம்பாது? அதிலும், அகல்யா இருக்கின்றாளே.

"ஹல்லோ மிஸ்டர் வனா, கானா, நீங்கள் ஏன் ஒரு தடவை பம்பாய் பக்கம் வரக்கூடாது?. தென்னாட்டிலிருந்து யார் யார் எல்லாமோ இங்கே வந்து போகிறார்கள். நீங்கள் ஏன் வருவது பற்றி ஒருவரிகூட எழுதுவதில்லை? இங்கு வந்தால் நீங்கள் எவ்வளவோ அற்புதங்களைப் பார்க்க முடியுமே..சென்னையின் மூலையில் கிருஷ்ணாம்பேட்டைச் சுடுகாட்டின் அருகே ஒரு தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் பம்பாய் போன்ற மாபெரும் நகரத்தைக் கற்பனையினால் கூட பிடித்து அடைத்துவிட முடியாது. பம்பாயை அறிய வேண்டுமானால் நீங்கள் இங்கு வந்து கேம்ப் போட்டுத்தான் ஆக வேண்டும். அப்பொழுது தான் நீங்கள் வாழ்க்கையைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் மேலும் எவ்வளவோ கற்றுக் கொள்ள முடியும். நீங்கள் கற்கக்கூடிய பாடங்களுக்கு ஒரு சிறு சாம்பிள் மாதிரி இருக்கட்டுமே என்பதனால் தான் அகல்யாவைப் பற்றி எழுதுகிறேன்.

"அகல்யா

"அவளை சோகத்தின் திரு உருவம் என்பதா? வைராக்யத்தின் வஜ்ர பிம்பம் என்பதா? சமூகம் சமூகம் என்கிறார்களே, அந்த உருவமற்ற-இதயமற்ற-மொந்தையின் கண்ணற்ற மூஞ்சியில் கரியை அள்ளிப் பூசத் துணிந்த வீர வடிவம் என்பதா? நண்பரே, ةTوالالنا அழைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே அவள் பெண்களில் பெரும்பாலோர் செய்யத் துணியாத ஒரு காரியத்தைச் சாதித்து முடித்த ஒரு பெண் என்று சொல்லி வைக்கிறேன்.