பக்கம்:வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

பொம்மைகள்

ரோட்டோரத்தில் ஒரு வீடு. அதில் மூன்று பெண்கள்.

நாகரிகம் கம்பீரமாகப் பெருகி ஓடும் பெரிய ரோடு

.لہصلى الله عليه وسلم ہوتے

நாகரிகத்தை, அதன் வளர்ச்சி வேகத்தை, மாறுதல்களின் கதியை எல்லாம் அளந்து காட்டும் விசேஷ "மீட்டர்கள் அந்த மூன்று பெண்களும்.

அவ் வீட்டில் "பெரிய மனிதர்" என்ற தோற்றத்தோடு விளங்கிய அப்பா இருந்தார். செல்வத்திலே பிறந்து, சீரும் செழிப்புமாக வளர்ந்த "பெரிய வீட்டுப் பெண்" என்று தோன்றும் அம்மா இருந்தாள். இன்னும் யார் யாரோ இருந்தார்கள். -

பெரிய குடும்பம் அது. பணம் புரளும் "செயலான" குடும்பம்தான். -

இருந்தாலும். - பச்சைப் பசிய இலைகளை மிகுதியாகப் பெற்ற "கன்னா வாழை (கல்வாழை செடிகளில் கூட பளிச்சென்று கண்ணைக் கவரும் தன்மையில் உயர்ந்து நிற்கும் தனிரகப் பூக்கள் மாதிரி, அக் குடும்பத்தில் அம்மூன்று பெண்களும் விசேஷக் கவர்ச்சியோடு விளங்கினார்கள்.

பெரியவர்கள் பாஷையில் சொல்லப்போனால் - மூத்தவள் "அப்பாவைக் கொண்டு இருந்தாள். இரண்டாவது பெண் "அம்மாவைக் கொண்டிருந்தாள். மூன்றாவது பெண்?