4. நினைவுச்
பத்தலமைத்துக் கவிந்து தொங்கும், இருபுறமும் நன்கு வளர்ந்து நின்ற பெரிய பெரிய ஆலமரங்களினூடே.
ஆலமரங்கள்ளு எப்படியாப்பட்ட ஆலமரங்கள் என்று எண்ணினுர் மன. பென. ஒரு ஆளு ரெண்டு கையையும் பரப்பி அதை ஆவிச் சேர்த்துக் கட்டமுடியாது. ஒவ்வொரு மரமும் அத்தனே பருமன். சில மரங்களே, ரெண்டு மூனுபேர் கைகளைக் கோர்த்து வளையமிட்டுத்தான் கட்டிப்பிடிக்கமுடியும். ஒவ்வொரு மரத்திலிருந்தும் விருதுகள் பாம்புகள் மாதிரிப் பின்னிப் பிணேந்து கீழ்நோக்கித் தொங்கும். சில விழுதுகள் மலம்பாம்புகள் தண்டி இருக்குமே! அதுகளே புடிச்சிக்கிட்டு நானும் மற்றப் பையன்களும் எவ்வளவுதரம் ஊஞ்சல் ஆடி விருக்கோம் ஆலும் வேலும் பல்லுக்குறுதி. அதிகாலேயிலே குளத்தங்கரைக்குப் போயி, நல்ல விழுதாப் பார்த்து, இத வானதாத்தேடி நறுக்கிக்கிட்டு, பல்லிலே வச்சு சவைச்சு பிரஷ்மாதிரி ஆக்கி, வெளிக்கி இருந்தபடியே பல்லே சுத்தம் செய்றது அப்போ ஊர்காரங்க வழக்கமா இருந்தது. அப்ப அவங்க பல்லும் ஆரோக்கியமா, பார்க்க சகிக்கக்கூடியதா இருந்தது. உம்ம நாகரிகப் பல்பொடியும் பசையும் பிரஷாம் எதுக்கு ஆகும்? நாகரிகம்னுதான் பேரு. பிரஷ்ஷை சுத்த மான துன்னு சொல்லமுடியுமா? ஆலம் விழுது பிரஷ் தினசரி ஒண்னு புதுசுபுதுசாக் கிடைக்குமே ! அதை பல்லால் கடிச்சு மத்துமெத்தென்ருகித் தேய்க்கிறபோது ஏற்படுகிற சுகம், உண்டாகிற ஒரு சுவை-ஆகா ஆகா! இந்தக்காலத்து பிள்ளே யாண்டான்களுக்கு அது எங்கே தெரியப்போகுது? எப்படித் தெரிஞ்சுக்கிட முடியும்? - -
- ரோடிலே ரெண்டு பக்கமும் ஓங்கிவளர்ந்த மரங்கள். மேலே தடித்தும் நீண்டும் கிளேத்தும் வளர்ந்த கிளேகள். நெடுகப் பந்தல் போட்டமாதிரி பச்சை பசேல்லு இஃலகள். இல் ஒவ்வொண்ணும் எவ்வளவு அகலம் ! பெருங்குடி ஆச்சி இட்டிலி வச்சுக் கொடுத்ததெல்லாம் ஆல இலையிலேதான். கொம்பங்குளத்துப் பிள்ளை வடை, பக்கடா கேட்கிறவங் களுக்கு ஆல இலையிலே வச்சுத்தான் கொடுப்பாரு. அகலமா,