6 திட்டங்களைப் பற்றி, கிராம மக்கள் நன்கு அறிந்து கொள்ளுதற் பொருட்டு, அத்திட்டங்களின் இயல்பையும் சிறப்பையும், அவை வெற்றி பெற்ருல் நாம் அடையும் நன்மைகளையும், அவற்ருல் நாட்டிற்குக் கிட்டும் பயன்களையும் விளக்குகின்ற காட்சிப்படங்களே அழகுற கிராம நூலகங்கள் தயாரித்து வைக்க வேண்டும். மக்களுக்கு அவற்றைக் காட்டுவதோடு, அவை பற்றிய விளக்கங்கள் அனைத் தையும், நூலகர் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். விண்ணேமுட்டி நிற்கும் மாமலைகள் , நீர் வளம் சுரக்கும் பெரிய ஆறுகள், இயற்கை எழிலுடன் விளங்கும் காடுகள் ஆகியவை தரும் இயற்கைக் காட்சிகளை எழில் ஓவியங்களாகத் திட்டி வைக்கலாம் அல்லது அவற்றைச் சித்தரிக்கும் ஒளி நிழற் படங்களை வாங்கி வைக்கலாம். இவற்றின் மூலம் மலைவளத்தை ஆற்றின் சிறப்பை, இயற்கையின் எழில் கோலத்தை அவர்கள் நன்கு தெரிந்து கொள்ள முடிகின்றது. விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களையும் இவ்வாறு அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கலாம். அணைக்கட்டு, மின்சார நிலையம், போன்றவற்றின் ஒளி நிழற்படங்களையும் மக்கள் பார்வைக்கு வைக்கலாம். விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் வண்ணப் படங்களும் நூலகங், களில் அவசியம் இடம்பெறுதல் வேண்டும். இவற்ருேடு, கிராம - மாவட்ட, மாநில நாட்டு வரைப் படங்களையும் கிராம நூலகங்கள் வாங்கி வைக்க வேண்டும். அவை பற்றி அடிக்கடி நூலகத்தார் மக்களுக்குக் கூறவும் வேண்டும்." படக் காட்சிகள் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சிகளைச் சித்தரிக்கும் படக் காட்சிகளை கிராம நூலகங்கள் அடிக்கடி மக்களுக்குக் காட்டி உதவலாம். அவ்வாறே விவசாய வளர்ச்சி விவசாய நுணுக்கங்கள் ஆகியவை பற்றிய செய்திப் படக் காட்சிகளையும் காட்டுவதற்கு அவை ஏற்பாடு செய்யலாம். ஆரோக்கிய வாழ்வு, உடல் நலம் பேனும் வகை ஆகியவை பற்றி மக்கள் நன்கு அறிந்து கொள்ளுதற்பொருட்டு அவை சம்பந்தமாக படக் காட்சிகளுக்கும் நூலகங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். வாகுெலி பெட்டியும் தேவை வானெலிப் பெட்டி ஒன்றும், ஒவ்வொரு நூலகத்தில் இருப்பது மிகவும் நல்லது. வாஞெலியில் ஒலிபரப்பாகும் இசை, நாடகம், சொற்பொழிவு, செய்தி முதலியவற்றை மக்கள் கேட்டு மகிழ்வதற்கு இது சிறந்த வாய்ப்பினை அளிக்கும். மாலை நேரத்தில் ஒவ்வொரு நாளும் ஒலி பரப்பாகும் கிராம நிகழ்ச்சியைப் போன்று
பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/12
Appearance