உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

வல்லிக்கண்ணன்

அதைவிட மதிப்பு மிக்க தாழ் வடம் ஒன்றினைச் செய்தோ, அதன் மதிப்பையோ கொடுத்து விடுகிறேன் என்றவாறு செட்டியாரவர்கள் தர இயலாத நிலை வந்ததுற்றது. சற்றேறக் குறைய முப்பத்திரண்டு சவரன் பொன்னிடப் பெற்ற அத்தாழ்வடம், ம. ரா. கு. அவர்களுக்கும் அவர் பின் வந்தோருக்குமே உரியதாயிற்று. பின்னாளில், அவரது சந்ததியார், மணலூர்ப்பேட்டை ஆலயத்திற்கு விற்று விட்டதாக அறியப்பட்டது.

திருக் கோவலூர் ஸ்ரீமத் ஞானியார் மடாலயத்தில் புதியதொரு சிறந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பெற்றது. 1912 ஆம் ஆண்டு அதற்குக் கிரகப் பிரவேசம் செய்து வைக்கப் பெற்றது. முதற் குருநாதராம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகளுக்குத் திருவருள் பாலித்தருளிய கோவல் வீரட்டான ஸ்ரீ பிரஹந்நாயகி ஸ்மேத ஸ்ரீ வீரட்டேசுவரப் பெருமானுக்கு நகரத்தாரால் அமைக்கப்பெற்ற திருக்கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடந்த அந்நாளிலேயே மடாலய கிருஹப் பிரவேசமும் நிகழ்வுற்றது. அவ்விழாவின் அங்கமாகச் சைவ மாநாடொன்றும் கூட்டப் பெற்றது. அப்போது "கோவல் சைவ சித்தாந்த சமாஜம்" எனப் பெயரியதோர் கழகமும் அமைக்கப் பெற்றது. கோயிலூர் ஸ்ரீமத்-சுப்பையா சுவாமிகள், வெங்கந்தூர் திரு.கணபதி சாஸ்திரிகள், தூத்துக்குடி திரு. முத்தையா பிள்ளையவர்கள், ம.ரா. குமாரசாமி பிள்ளையவர்கள் ஆகியோர் சொற்பொழி வாற்ற ஸ்ரீலஸ்ரீ.சுவாமிகள் முன்னுரை முடிவுரைகளுடன் சிறப்பாக அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. .

இரண்டாம் நாள், ஸ்ரீமத் ஞானியார் கழகத்தின் ஆண்டு விழாவும், மூன்றாம் நாள் பார்க்கவ குல சங்கத்தின் ஆண்டு விழாவும் சிறப்புற நடந்தன.

திருப் பாதிரிப் புலியூர் மடாலயச் சீர்த்திருத்தம் : திருப்பாதிரிப் புலியூர் மடாலயத்தின் முன்புறத்தி லிருக்கும் பெரிய கூடம் சுவாமிகளால் அமைக்கப் பெற்றதேயாகும்.

அதற்குமுன், அவ்விடம் பெரிய கீற்றுக் கொட்டகையிடப் பெற்றதாய், முருகப் பெருமானது வாகனங்கள், சுவாமிகள் எழுந்தருளிப் பட்டினப் பிரவேச முதலிய கொண்டருளும் பல்லக்கு முதலியவை வைக்கப் பெற்றிருக்கும் அந்த இடம், சொற்பொழிவு, முருகனை வழிபட வருவோர்