மீன்கள் ஒருவனை தொல்லையிலிருந்து காப்பாற்றும் 41
சின்னஞ்சிறிய நரைமய மஞ்சள் நிற இருல்கள் உள்ளே சண்டை விட்டு உதைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது, கன மேறிய பகுதியைத் தாத்தா படகின் தளத்தில் தொப்பெனப் போட்டார். கயிற்றைத் தளர்த்தி, கொம்பு வளையத்தை விரல் களால் பற்றிக்கொண்டு, வலையை மெதுவாய் உதறிஞர். மூடி யிருந்த அதன் அடிப்பாகம் திறந்தது. நூற்றுக்கும் அதிகமான இருல்கள் தளத்தின் கை மீது துள்ளின. உதைத்தன, துடித்தன. தாத்தா அவற்றைக் கை நிறைய அள்ளிஎடுத்து, உப்ஸ்ரீர் வாளி ஒன்றில் நழுவவிட்டார்.
இப்போது நீ செய்து பார். தோன்றுவதுபோல, வலைவீசுவது அவ்வளவு எளிதல்ல. அதை வீசும்போது, பெண்ணின் சுழன்றாடும் பாவாடை மாதிரி வலையும் சுற்றிப் பரவும்படி நீ கவனிக்க வேண்டும். எச்சரிக்கையோடு இல்லாவிடில், உன் வாயில் இருக் கும் ஈயக்குண்டு முன்பற்கள் இரண்டைப் பிடுங்கிவிடும். சுருக் குக் கயிற்றை இறுக்கி இழுப்பதிலும் ஒரு சாமர்த்தியம் உண்டு. இருல்கள் மீது வலை படிவதற்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்; எனினும் அதிக நேரம் விட்டு விடக்கூடாது. அப்படி விட்டால், இருல்கள் கீழே பாய்ந்து வெளியேறிவிடும். வலையைச் சுற்றி விசு ’’ என்றார் அவர். ~~
காலையின் பெரும்பகுதியை நான் வலையோடு தான் கழித்தேன். குண்டினுல் என் பற்களைச் சேதப்படுத்தினேன். வலையைச் சிக்க லாக்கினேன், கெடுத்தேன். ஒரு தடவை சீக்கிரமே சுருக்கி இழுத் தேன். சில சமயம் வேகமாய் இழுக்காது விட்டேன். எனது பயிற்சிக்கு உதவிய இருல்கள், சிறு மீன்கள் கூட்டங்களை வலை நோக்கி இழுக்க மறந்தேன். முடிவில். அதை வீசி எறிந்து, சுழல வைக்கும் தன்மை பெற்றேன். அதனால் சில ராத்தல் இருல்களும், கொஞ்சம் சிறு மீன்களும் பிடித்தேன். வெகு நாட்களுக்கு அப்பால் நான் அவ் வலைகொண்டு விளையாடி, ஆழமற்ற நீர்நிலை களில் மீன் பிடித்து, தூண்டில் முள்ளுக்கு ஏற்ற இரைகளைச் சேகரிக்கும் திறமை பெற இருந்தேன். ஆனால் அன்று காலைவேளை யில், என் கைகள் இற்று விழலாம் என்றே தோன்றியது. அதற் குள் தாத்தா, இவ்வளவு போதும் ; சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, வடி நீரில் மீன் பிடிக்கப் போகலாம் என்றார்.
தண்ணீர், சில பாறைகளைச் சுற்றிலும் சுழல் அமைத்திருந்த இடத்தை அடைவதற்காக நாங்கள் சுமார் ஒரு மைல் படகு வலித்தோம். தாத்தா நங்கூரத்தை வெளியே போட்டார். துாண்டிலின் கயிறு பூராவையும் எறிந்தார். படகு விலகிச் சுற்றி, தெளிவான இடம் ஒன்றில் ஊசலிட்டது. அதன் இருபுறமும் நீர் வேகமாய் ஒடிக்கொண்டிருந்தது. நாங்கள் கயிற்றுச் சுருள்களைப் பிரித்து, அவற்றின் முறுக்குகள் நனைவதற்காக, நீரோட்டத்தோடு மிதக்க விட்ட்ோம், பிறகு, கை வீசி, பிடிப் பிடியாய் பற்றி அவற்றை இழுத்து, படகுத் தளத்தில் அழகிய ஈரச் சுருளாய்