24 வாழ்க்கைச் சுவடுகள் அந்திநேரத்திலும் பூஜை செய்வதற்காகப் பட்டர்கள் ராஜவல்லிபுரத்தில் இருந்து வந்து செல்வார்கள். மார்கழி மாதம் திருவாதிரையின்போது தான் கூட்டம் கூடும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து குழுமுவார்கள். - ஆறும் தனித்து. ஆள் நடமாட்டம் அதிகமின்றியே காட்சி தரும். அழகும் அமைதியும் நிறைந்த சூழல், அதனாலேயே எனக்கு மிகப் பிடித்த இடம் அது பின்காலத்தில் ஆற்றில் நீராடிக் களிக்கும் இனிமையை அனுபவிப்பதற்காகவே நான் ஒவ்வொரு வருடமும் ராஜவல்லிபுரம் சேர்ந்து இரண்டு மூன்று மாதங்கள் தங்குவதை வழக்கமாக்கிக் கொண்டேன். எனவே, விக்கிரமாதித்த ராஜன் நாடாறு மாதம் காடாறு மாதம் வாழ்ந்தது போல வல்லிக்கண்ணன் பட்டணத்தில் பல மாதங்களும் பட்டிக்காட்டில் சில மாதங்களும் வசிப்பதை வழக்கமாக்கியிருக்கிறார் என்று என்னை அறிந்தவர்கள் சொல்வது இயல்பாயிற்று. 1936இல் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு ஊர் சேர்ந்த சந்தர்ப்பத்தில்தான் நான் தொடர்ந்து இருபது மாதங்கள் ராஜல்லிபுரத்தில் வசிக்க நேர்ந்தது. 'சொல்லின் செல்வர் ராபி. சேதுப்பிள்ளை அவர்களின் ஊரும் ராஜவல்லிபுரம் தான். அவர் அந்த ஊரில் வசித்ததில்லை. அடிக்கடி அவர் அவ்வூருக்கு வந்ததும் இல்லை. ஆயினும் ஊர்வாசிகளுக்கு அவர் பெயரைச் சொல்வதில் தனிப்பெருமை இருந்தது. நான் ராபி. சேதுப்பிள்ளையை 1941இல் எனது 21ஆவது வயதில் தான் காண நேரிட்டது 'நெல்லை வாலிபர் சங்கம் ஆண்டு விழாக் கூட்டத்தின் போது அதற்கு முன்னர் அவர் எழுதிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்திருந்தேன். ராஜவல்லிபுரத்தில் அகிலாண்டம் என்ற பெயர் உடையவர்கள் அதிகம் உண்டு. அவ்வூர் சிவன் கோயிலின் அம்மன் பெயர் அது. சுவாமி பெயர் அக்கினீஸ்வரர். அகிலாண்டம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான பெயராக வழக்கத்தில் இருந்தது. ஊருக்கு வடக்கே காளி அம்மன் கோயில் தனித்திருந்தது. சக்தி உள்ள தெய்வம் என்று மக்கள் நம்பி வழிபட்டு வந்தனர். வலதி அம்மன் என்பார்கள், வலபூதி அம்மன் என்று எழுத்தில் குறிக்கப்படுவது வழக்கம். தேவர், கோனார் மற்றும் உள்ள இனத்தினர் தங்கள் குடும்பத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வலதி என்று பெயரிட்டு மகிழ்ந்தார்கள். ஊரில் அதிக எண்ணிக்கையில் வசித்த கார்காத்த வேளாளர்களிடையே கோபால கிருஷ்ணன் என்ற பெயர் தலைமுறை தலைமுறையாக அதிகம் சூட்டப்பட்டு வந்தது. எனவே அங்கு கோபால கிருஷ்ணன்கள் அதிகம் காணப்பட்டார்கள். எனக்குக் கூட கோபாலகிருஷ்ணன் என்று தான் பெயர்
பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/25
Appearance