25 வாழ்க்கைச் சுவடுகள் ஆனார். தெய்வ உருவம் பொறிக்கப்பட்ட செம்பு பயபக்தியுடன் வணங்குவதற்கு உரிய புனிதப் பொருள் ஆகிவிட்டது. அவர்கள் வளம்பெற்று வாழலாயினர். அந்தச் செம்பு இன்னும் பூஜிக்கப்பட்டு வருகிறது. கோபாலசுவாமி என்று போற்றி வணங்கப்படுகிறது. 1936-1937 ஆம் வருடங்களில் நான் ராஜவல்லிபுரத்தில் தங்கியிருந்த காலத்தில் என் உறவினர் ஒருவர் பழைய பத்திரிகைகளும், புதிய புத்தகங்களும் கொண்டு வந்தார், நானும், என் அண்ணா கோமதிநாயகமும் படித்து மகிழ்வதற்காக ராஜகோபாலகிருஷ்ணன் என்பது அவர் பெயர். 4 பத்திரிகைகளுடன் எனக்கு அறிமுகம் சிறுவயதிலேயே ஆரம்பித்து விட்டது. • நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது, பரவி சு தென்லைட்டரின் லோகோடகா இதழை அறிய நேர்ந்தது. நாங்கள் வசித்த வீட்டுக்குப் பக்கத்து விட்டுக்காரருக்குத் தபாவின் லோகோபகாரி வந்து கொண்டிருந்தது. நெல்லையப்பர் அவருக்கு உறவினராக இருந்திருக்கலாம். அவர் சந்தா கட்டி பத்திரிகை வரவழைத்தார் அந்த இதழில் வந்த முக்கிய விஷயங்கள் பற்றி அவர் சொல்வது உண்டு பரவி நெல்லையப்பர் நம்ம ஊர்க்காரர் நம்ம ஆளு என்றும் அவர் பெருமையாகச் கொன்வார் நம்ம ஊரு நம்ம ஆளு' என்ற பற்றுதலுடன், ஒற்றுமை' என்ற மாத இதழை எதிர்வீட்டுக்காரர் ஒருவர் பரப்பிக் கொண்டிருந்தார். வீரபாகு பிள்ளை என்பவர் சென்னை தியாகராயநகரில் இருந்து வெளியிட்டு வந்த இதழ் அது. புத்தக வடிவத்தில், படங்களோடிருந்த, பல்சுவை ஏடு. அதில் ரா.பி. சேதுப்பிள்ளை கட்டுரைகளும் பிரசுரம் பெற்றன. நாங்கள் பாளையங்கோட்டையில் வசிக்க ஆரம்பித்த போது, 'தமிழ்நாடு நாளிதழை அப்பா வாங்கலானார். அதற்கு முன்னரும் அந்தப் பத்திரிகை வீட்டில் வாங்கப்பட்டிருந்திருக்கலாம். அது என் நினைவில் பதியவில்லை. நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது தான் தமிழ்நாடு என் கவனத்தில் பதிவாயிற்று சில நாட்களில் என் அண்ணா கோமதிநாயகம், அப்பாவுக்காகச் செய்திகளை உரக்க வாசிப்பது உண்டு. செய்தித் தலைப்புகளும், விளம்பரங்களில் காணப்பட்ட படங்களும் என் கவனத்தை ஈர்த்தன. சேலம் வரதராஜநாயுடு நடத்திய பத்திரிகை அது
பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/27
Appearance