பக்கம்:தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164

தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்



உருவவடிவினர் என்பதை சிறைப்பட்ட கடலாய்வினர் உணர்கின்றனர். கடலுக்கடியில் குவிந்துள்ள பல்வேறு வகையான தாதுப் பொருட்களைச் சேமித்து, அவற்றைத் தங்கள் கிரகங்களுக்குக் கடத்தும் வேற்றுக் கிரகக் திருடர்கள் என்பதையும் சிறைப்பட்டவர்கள் உணருகின்றனர்.

சிறைப்பட்ட கடலாய்வுக் கலத்தினர் தங்களைப் போல் கடலடித் தாதுப் பொருட்களைத் திருட வந்தவர்களில்லை என்பதையும் தங்களோடு விரோதம் பாராட்டாது நட்பு காட்டும் தன்மையினர் என்பதையும் உணர்ந்த வேற்று மண்டலத் திருடர்கள் சிறைப்படுத்திய கடலாய்வுக் கலங்களை விடுவிக்கின்றனர். எவ்விதச் சேதமும் இல்லாது முத்து, அவன் தந்தை அரசு, அறிவு மணி மற்றுமுள்ளோர் பாதுகாப்பாக சிறை மீண்டு தாய்க்கலத்தை அடைந்து நலமாகத் திரும்புவதுதான் கதை.

இக்கதையை நடத்திக் செல்லும் ஆசிரியர், முதல் கடலடி ஆய்வுக்கலமான கடல் ராணி மூலம் கடலுக்கடியில் பயணம் செய்யும்போது, கடலடி ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் பல்வேறு விதமான ஆய்வுக் கருவிகளைப் பற்றிய விளக்கங்களைச் சுவையாகச் சொல்லிச் செல்கிறார். கடலடியில் உள்ள பலவிதமான உயிரினங்களையும் அவை மேற்கொண்டுள்ள வாழ்க்கைப் போராட்டங்களையும் திறம் பட விளக்குகிறார். கடலடி நில அமைப்புகளையும் அங்கே அமைந்துள்ள தாதுப் பொருட்களையும் சிறப்பாக விளக்குகிறார். எதிர்பாராது சிறைப்பட்ட 'கடல் ராணி' கலத்தைக் தேடிக் கண்டுபிடிக்கக் கடலடி நோக்கிப் புறப்படும் மற்றொரு கலமான கடல் மலர் கலம் செல்லும் வழியில் காணப்படும் விநோதமான கடல் தாவரங்கள், கடல் விலங்குகள், வெப்ப நீருற்றுகள், கடல் நீரோட்டங்கள் ஆகிய அனைத்துத் தகவல்களையும் இலக்கியச் சுவையோடு