பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

163


பெற்றபோதிலும் இந்நூல்களில் கூறப்படும் சம்பவங்கள் எவையும் வரலாற்று உண்மைகளோடு நேரடித் தொடர்புடையன எனக் கூறுவதற்கில்லை. வரலாற்றுச் சாயலில் மேற்கொள்ளப்பட்ட கற்பனைப் படைப்புகளாகவே இக்கதைச் சம்பவங்கள் கருதப்படுகின்றன. ஆயினும் இஸ்லாம் போர் பற்றிக் கொண்டுள்ள கொள்கைகளையும் இஸ்லாமிய நெறியை, எதிரிகளின் உள்ளமும் ஏற்கும் வகையில் எடுத்துக் கூறப்படும் தன்மையையும் இப்படைப்புகள் சிறப்பாக எடுத்துக்கூறத் தவறவில்லை.

படைப்போர் இலக்கிய வரிசையில் நாட்டுப்புறப் பாடல் போக்கில் அமைந்த மற்றொரு குறிப்பிடத்தக்க இலக்கியம் ‘காசீம் படைப்போர்’ ஆகும். இந்நூல் எழுதப் பட்ட காலம் என்ன என்பதும் தெரியவில்லை. இந்நூலாசிரியர் பெயர் என்ன என்பதும் தெரியவில்லை. ஒரு சிலர் இந்நூலை எழுதியவர் அப்துல் காதிர் ராவுத்தர் எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், இதனை உறுதிப்படுத்த ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை,

இந்நூல் 215 ஈரடிக் கண்ணிகளால் ஆனது. முதல் மூன்று காப்புப் பாடல்கள் விருத்தப் பாடல்களாகஅமைந்திருந்தாலும் பாமர வாசகர்களைத் தன் பால் பெரிதும் ஈர்க்கும் தன்மையுடையனவாய் பாமர மக்கள் அன்றாட வாழ்வில் அதிகம் கையாளும் சாதாரண நடைமுறை வழக்குச் சொற்களையே அதிகம் கையாண்டு பாடல்கள் புனையப்பட்டுள்ளன. எனவே படிக்கவும் கேட்கவும் எளிதாகப் புரிந்து கொள்ளவும் ஏற்றதாக இப்படைப்போர் இலக்கியம் அமைந்துள்ளது

வல்ல அல்லாஹ்வின் பேரருளை வேண்டியும் அண்ணல் நபி முதலாக இறைத் தூதர்கள் போற்றுதலோடும் தொடங்கும் இப்படைப்போர் இலக்கியம் கர்பலா போர்க்-