பகுதி) ரு பாவ தி 29
சூரசேகன்.-அவன்தான் சிறைச்சாலையிலே கிடக்கின்ருனே! அவன் தோழன். சுசீலன்:- என்னுடைய தமக்கை பிள்ளைதான்; அவன் பெயர் சுகுமாரன். சூரசேகன்:-இந்த ஊரிலே நல்ல தமிழ் வித்துவான்கள் இருக்கின்றர்களா? சுசீலன் :-ஏன் அதற்கென்ன ? சமஸ்தான குரியும் மகா வித்துவானுமாகிய
வித்தியாசாகரப் புலவர் இருக்கின்ருர். சூரசேகன் :-காம் பாண்டியைேடு புரிந்த யுத்தத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிக் கவிபாடும்படி அவர்க்கு உத்தரவு கொடுக்கவேண்டும். அப் படியல்லாவிட்டால் நம்முடைய கருவூர்ச் சமஸ்தான வித்வான் வண்ணக் களஞ்சியப் புலவருக்கு உத்தாவு கொடுப்போம். சுசீலன் :-ஆகட்டும். அந்தப்படியே வித்தியாசகரப் புலவரிடங் தங்களு
டைய உத்தாவினத் தெரிவிக்கின்றேன். (சேவகன் வருகின்றன்.) சேவகன் :-மகாராசா அவுக சமுகத்திலே கும்பிட்றேன். சூரசேகன் :-அடே! சேவகா! ஏன் இவ்வளவு தாமதம்? சேவகன் :-மகாராசா அவுகளைக்கூட்டி வெகு தொலைபோய், வந்தவளி தெரியாமே, நடுக்காட்டிலே, வெய்யில் கொளுத்தக் கொளுத்தக் கொண்டு விட்டிட்டு வந்தேன். அதுதான் கோமாயிறிச்சு. சூரசேகன் :-நேற்றே போனயேடா..? சேவகன் :-ஆமாம் மகாராசா! நான் திரும்பி வாரையிலே இருட்டிப் போ பிறிச்சு. அதுதான் இப்ப வந்தேன். இல்லாட்டி அப்பவே வங் திருப்பேன். - சூரசேகன் :- அவர்களைக் காட்டிலே துரத்திவிட்டு வருகிறபோது அவர்கள் என்ன பேசிக்கொண்டார்கள் உள்ளதைச் சொல்லவேண்டும். இல் லாவிடில் உன் தலையை இந்த வாளில்ை துண்டித்துப் போடு வேன்.
(வாளையோச்சுகின்றன்.) சேவகன் :-மகாராசாவே! நான் அவுகளைக் காட்டிலே விட்டவுடனே அவுக கோஒண்டு வாய்விட்டுக் கத்னக. அந்த வேளையிலே புலி கரடி வந்து திரியும்போலத் தோணிச்சு. காடோ வெகு பயம்மா யிருந்திச்சு. ஆகையினலே, எங்கே புலி என்னையும் அடிச்சுக்கிட்டு போயிருமோ எண்டு. பயந்து நான் என்னுலே முடிஞ்சமட்டும்
வெகு ಡಿಮಿಹLT ஒடியாத்திட்டேன். . சூரசேநன்:-அவர்கள் என்னடா பேசிக்கொண்டார்கள் என்று கேட் டால் இவற்றையெல்லாம். உன்னே யார் சொல்லச் சொன்னர்கள் ? ஏண்டா! அவர்கள் பேசிக்கொண்டதைச் சொல்லுகின்ருயா என்ன இப்போது? --