64 முருகன் காட்சி
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே
ஏரகத் துறையும் சீரியனாம் முருகன்தன் சீர்த்தியினைச் சிறக்கக் கண்டோம். இனிக் குன்று தொறும் ஆடிவரும் குமரவடிவேலனைக் காண்டோம். குன்றுதொறும் குமரன் உறைகின்றான் என்பது பழந்தமிழர் கொண்ட நம்பிக்கை. இது குறித்தே தொல்காப்பியனார் சேயோன் மேய மைவரை உலகமும்’ என்றார். குறிஞ்சி நிலக் கோமானாகக் குமரனைக் கோலங்கண்ட நாடு இது. குன்றுகளில் எல்லாம் அவன் அருட்டிருப்பாதங்கள் பதிகின்றன என்பது பெரியோர் முடிபு. பதினெட்டாம் நூற்றாண்டின் மிகப் பெரும் புலவரும் கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்பெறுபவரும் ஆகிய துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் இளவல் கருணைப் பிரகாச சுவாமிகள் அ ரு ைம ய ா ன .ெ த ா ரு கருத்தினைத் தம் சீகாளத்திப் புராணத்தில் வெளியிடு கின்றார். கல்’ என்பதற்கு மலை என்ற பொருள் தமிழில் உள்ளதனை நாம் அறிவோம். இதனை வைத்துக் கொண்டு ஒர் விழுமிய நயந்தோன்றும் வியத்தகு கருத்தினை வெளியிடுகின்றார் அவர். முருகப் பெருமான் என் மனத்தை விட்டு நீங்காமல் எஞ்ஞான்றும் நீக்கமற நிறைந்திருக்கும் காரணத்தை யான் கண்டு கொண்டேன். அது என்ன வெனில், முருகன் தன்மனமுவந்து வாழும் கற்களில் (மலைகளில்) என் நெஞ்சம் ஒரு கல்லே என்று மயங்கித் துணிந்து என் நெஞ்சக் கனகல்லில் கொலு விற்றிருக்கின்றான் போலும்!’ என்று பாடிப் பரவசப் படுகின்றார். இதோ அவ் அழகிய திருப்பாடல்:
வளர்செழுங் குருதிச் சூட்டு வாரணம் வலனு யர்த்த ஒளிகெழு பரிதி வைவேல் ஒருபெருங் கருணை மூர்த்தி க்ளிகெழு சிறந்து தான் வாழ் கற்களில் ஒருகல் என்றோ
அளிய என் மனத்தினுள்ளும் அகன் றிலன் இருக்கும்
மன்னோ