92 முருகன் காட்சி
லுக்கு ஏற்றம் தருகின்றார். வேட்டுவ வரியில் வேட்டு வர்கள் காளிக்கு வழிபாடு ஆற்றுவதைக் காட்டுகின்றார் . வஞ்சிக் காண்டத்தின் முதற்காதையான குன்றக் குரவையில் முருகனின் பெருமையைப் பலபடப் புகழ்ந்து கூறுகின்றாl முருகன் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் திருதி தலங்களையும், அவன் சூரபதுமனை வென்றதனையும் சரவணப்பூம் பொய்கையில் பிறந்தமையையும், ஓராறு முகமும் ஈராறு கையுமாய் எழுந்தருளும் தோற்றக் தினையும் அவன்தன் அழகுக் கரத்தில் காணப்படும் வேலினையும் இனிமையுற எடுத்து மொழிகின்றார். இனி, குன்றக் குரவையில் இளங்கோவடிகள் காட்டும் முருகனைப் பற்றிய செய்திகளைக் காண்போம்.
குன்றுவாழ் குறமகளிர் புனலில் மூழ்கி விளையாடு கின்றனர். பின்னர் முருகனை வாழ்த்திக் குரவைப் பாட்டுப் பாடுகின்றனர். சூரபதுமனை வென்ற வேலவனின் வெற்றியை விளம்புகின்றனர்: o
உரையினி மாதராய் உண்கண் சிவப்பப் புரைதீர் புனல்குடைந் தாடினோ மாயின் உரவுநீர் மாகொன்ற வேலேந்தி யேத்திக் குரவை தொடுத்தொன்று பாடுகம்வா தோழி.
-சிலம்பு: குன்றக் குரவை: 7
பின்னர் அவர்கள் தெய்வம் பராவு முகத்தான் மூன்று பாடல்கள் பாடுகின்றனர். பெரிய கடலின் நடுவிடத்தே புகுந்து முன்னொரு காலத்திலே சூரபது னாகிய மாமரத்தை அறுத்த ஒளி உமிழும் வெள்ளிய வேல் சிறப்பு மிகுந்த திருச்செந்துார், திருச்செங்கோடு, சுவாமி மலை, ஏரகம் ஆகிய இடங்களைவிட்டு நீங்காத முருகனின் கையிடத்த தாகிய வேலேயாம்’ என்கின்றனர்.
சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும் ஏரகமு நீங்கா விறைவன்கை வேலன்றே