104
வாழும் வழி
“விளங்கிழை பகிர்ந்த மெய்யுடை முக்கண்
காரணன் உரையெனும் ஆரண மொழியோ
ஆதிசீர் பரவும் வாதவூர் அண்ணல்
மலர்வாய்ப் பிறந்த வாசகத் தேனோ
யாதோ சிறந்தது என்குவீர் ஆயின்
வேதம் ஓதின் விழிநீர்ப் பெருக்கி
நெஞ்சநெக் குருகி நிற்பவர்க் காண்கிலேன்
திருவா சகமிங் கொருகால் ஓதின்
கருங்கல் மனமும் கரைந்துருகக் கண்கள்
தொடுமணற் கேணியின் சுரந்துநீர் பாய
மெய்ம்மயிர் பொடிப்ப விதிர்விதிர்ப் பெய்தி
அன்ப ராகுநர் அன்றி
மன்பதை உலகில் மற்றையர் இலரே”
என அருளிச் செய்துள்ளார். இதன் சுருங்கிய கருத்தாவது: வேதம் ஓதினால் விழிநீர்ப் பெருக்கி நெஞ்சம் நெகிழ்பவர்களைக் காணேன்; திருவாசகத்தை ஒருகால் ஓதினாலேயே கருங்கல் மனமும் கரைந்து கண்ணீர் பெருக்கி மெய்ம்மயிர் சிலிர்த்து அன்பராகின்றனர்- என்பதாகும்.
ஆனால் சிலர் “வேதத்தைக் கேட்டால் மட்டும் உள்ளம் நெகிழாதா? சாமவேதமொன்றே உருக்கிவிடுமே. சிவப்பிரகாசர் கூறியது எங்ங்னம் பொருந்தும்?” என்று கூறுகின்றனர். ஆனால் அடிகளார் இங்ஙனம் கூறியிருப்பது திருக்கோயில்களிலும், திருவிழாக் காலத்திலும் வடமொழிப் பாட்டும் தமிழ்ப் பாட்டும் மக்களால் விரும்பிப் பாராட்டப்படும் திறம் நோக்கியேயாம். அன்றியும் வடமொழி ஆட்சி நின்று நிலைத்திருந்த