தேவி அநுபூதி - 3 3. சுகம் பெற சகமாயை யிலாத தபோதனர்கள் ககவே கடை கொண்டிடு காயடியேன் சுகமாகி2ல கூடிடவே துணைசெய் மகமாயை களைந்தருள் வைணவியே. (உ) மகாமாயைகளை நீக்கி அருளும் வைணவித் தாயே! உலக மாயையிற் சிக்கு உண்ணுத தவசிகள் (பழித்துச்) சிரிக்கும் (தீய) ஒழுக்க கடையைக்கொண்ட அடியேன் பேரின்ப நிலையை அடையும்படி துணை புரிந்தருளுக. (கு) ககவே - சிரிக்கவே ; இழிவைக் காட்டும் சிரிப்பு. ஈற்றடி கந்தரநுபூதி (5)-ஐத் தழுவும். 4. பூசிக்க திரு முல்லை யில்வாழ் சிவையே பரையே ! இரு முல்லை வனத்தினும் நீ உறைவாய் ஒரு முல்லை உன் பொன்னடி யிட்டுணரேன் மரு முல்லை மணங்கமழ் வைணவியே. (உ) திருமுல்லை வனத்துத் தேவியே! மண முள்ள முல்லையின் நறுமணம் வீசும் வைணவித் தேவியே! வடதிரு முல்லைவாயில், தென்திருமுல்லை வாயில் என்னும் இரண்டு முல்லை வனங்களிலும் நீ வீற்றிருக்கின் ருய் ; ஒரு முல்லை மலரைக்கூட கான் உன் திருவடியில் இட்டு அறியேன். (கு) வடதிருமுல்லைவாயில் -சென்னைக்கு அருகில் உள்ளது; சுந்தரரின் தேவாரத்தைப் பெற்றது. இங்கு, சுவாமி - மாசிலாமணிசுரர், தேவி - கொடியிடைகாயகி; தென்திருமுல்லைவாயில் - சீகாழிக்கு அருகில் உள்ளது;
பக்கம்:வைஷ்ணவி சந்நிதி முறை-1.pdf/31
Appearance