பக்கம்:கம்பன் கலை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூரிய தேர்வலான் 47 அமைச்சர் குழுத் தலைவனும் அவனேயாவான். சுமந்திரன் என்ற வடமொழிப் பெயருக்கு அரசனுடைய இயங்குதினை, நிலைத்திணைப் பொருள்களைக் கவனித்துக் கொள்ளும் கடப்பாடு உடையவன் என்பதே பொருள். எனவே, தேர்வலானும் முதலமைச்சனுமாய் இருந்த சுமந்திரனை அன்பே வடிவான ஒரு பாத்திரமாகவே படைக்கிறான் கவிஞன். முதன்முதலாக நாம் சுமந்திரனைச் சந்திப்பது பால காண்டத்திலாகும். அங்கே சுமந்திரனைப் பெயரளவில் தான் காண்கிறோம். தசரதன் மகப்பேறு குறித்து வேள்வி இயற்ற இருசிய சிருங்க முனிவனை அழைக்கப் புறப்பட்டான். அந் நிலையில் - “...சுமந்திரனே முதல்வ ராய - வன்திறல் அமைச்சர் தொழ திருவவதாரப் படலம், 57) தசரதன் புறப்பட்டான் என்று கேட்கிறோம். இந்த அடியின்மூலம் சுமந்திரன் அமைச்சன் என்பதும் நமக்கு அறிவிக்கப்பட்டது. இனி அடுத்து நாம் அந்த அமைச்சர் பெருமகனைச் சந்திப்பது அயோத்தியா காண்டத்திலாகும். தசரதன் இராமனுக்கு முடிசூட்டுவிழாச் செய்ய மனத்தில் நினைந்து மந்திரக் கிழவரை வருக எனக் கூறி மந்திர ஆலோசனை தொடங்குகிறான். அந்த அவையில் தசரதன் திடீரென்று தன் கருத்தை வெளியிடாமல் சுற்றி வளைத்துப் பேசினது நாமறிந்ததே. அவன் யார் மாட்டு அஞ்சினான் என்று உறுதியாகக் கூற இயலாதாயினும் இராமனுடைய முடிசூட்டுக்குத் தடைகள் பல இருக்கும் என்று கருதினான் என்பதும், அதனை மெள்ள் அறிந்து கொள்ளும் நோக்குடனேயே மெள்ள மெள்ளத் தன் கருத்தை வெளியிட்டான் என்பதும் நாம் ஊகிக்கலாம். ஆனால், அவன் எதிர்பார்ப்பதற்கு மாறாக ஒருவரும் அவன் கருத்தை எதிர்க்கவில்லை. அம்மட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கம்பன்_கலை.pdf/57&oldid=770794" இலிருந்து மீள்விக்கப்பட்டது