பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என இளம்பூரணரும், “மேல் அதிகாரப்பட்டு நின்ற வாணிகர்க்கு ஒதிய பொருள் செயல்வகை அந்தணர்க்கும் அரசர்க்கும் இருவகை வேளாளர்க்கும் உரித்து” என நச்சினார்க்கினியரும் தம்முள் முரண்பட உரை வரைந்துள்ளனர். இங்கு ‘மேலோர்’ என்றது, முற்சூத்திரத்திற் குறிக்கப்பட்ட வேந்தனையும் அவனொடு பொருந்திய ஏனோரையும் சுட்டுவதாகும்; இளம்பூரணர் கூறுமாறு தேவரையோ நச்சினார்க்கினியர் கூறுமாறு வணிகரையோ ‘மேலோர்' என்னும் இச்சொல் சுட்டியதென்பதற்கு இச்சூத்திரத்தின், முன்னும் பின்னும் எத்தகைய தொடர்பும் காணப்படவில்லை. இவ்வாறே இச்சூத்திரத்திலுள்ள ‘நால்வர்’என்ற சொல்லும் இளம்பூரணர் கருதுமாறு நால்வகை வருணத்தாரையோ நச்சினார்க்கினியர் கூறுமாறு அந்தணர், அரசர், இருவகை வேளாளர் என்னும் நால்வகைப் பிரிவினரையோ குறித்ததெனக் கொள்ளுதற்குச் சிறிதும் இடமில்லை யென்பதும், இங்கு ‘மேலோர்’ என்றது வேந்தரையும் வேந்தரொடு பொருந்திய வேளிர் முதலிய ஏனையோரையும் குறித்தது என்பதும், ‘நால்வர்’ என்றது, அடியோர், வினைவலர், ஏவன்மரபின் ஏனோர் எனப்படும் கீழோரல்லாத நானிலத் தலைவர்களாகிய நிலமக்களைக் குறித்த தென்பதும் ஆகியவுண்மைகளை நாவலார் பாரதியார் இச்சூத்திரவுரையிற் காரணங்காட்டி விளக்கியுள்ளார்.

“மேலே, வேந்தன் என்றும் வேந்தனொடு சிவணிய ஏனோர் என்றும் மேவிய சிறப்பின் ஏனோர் என்றும் குறிக்கப்பட்ட மேலோர்களுடைய பிரிவு தமிழகத்தில் நானில மக்களுக்கும் ஒப்பவுரியன” என்பது இச்சூத்திரத்திற்கு நாவலர் பாரதியார் வரைந்த மெய்யுரையாகும். இந்நூற்பாவில் உள்ள “நால்வர்" என்னுந் தொகைச் சொல், பிற்கால உரையாசிரியர்கள் கூறியவாறு நால்வகை வருணத்தாரைக் குறிப்பதன்று என்பதும் நாவலர் பாரதியார் கூறியவாறு நானிலத் தமிழ்க்குடிகளையே குறித்து நின்றதென்பதும்,

     “பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே               
      நிலத்திரி பின்றஃதென்மனார் புலவர்”
                                            (தொல்-பொருளியல் 25)
  1. 2
    12