'பூவே உன்னைப் படைத்தவர் ஆர் ? புது மணம் உள்ளே நுழைத்தவர் ஆர்? பல பல நிறங்கள் பண்ணவர் ஆர்? பார்க்க அழகு தந்தவர் ஆர் ? உன்னைச் செய்தோன் வல்லவனே ! உலகுக் கெல்லாம் நல்லவனே ' என்னும் இந்த அரிய பாடலைக் குழந்தைகள் நம் வானெலியிலும் கேட்டிருக்கலாம். இதைப் போன்ற பல அரிய அழகிய பாடல்களைக் குழந்தைகளுக்காகவும் பெரியோர்களுக்காகவும் சுமார் 35 ஆண்டுகட்கு. முன்பே ஒரு பேராசிரியர் பாடிப் புத்தக மூலமாகவும் வெளியிட்டிருக்கிருர். அவர்தான் பேராசிரியர் மணி திருநாவுக்கரசு முதலியார் என்பவர். அவரை அறிஞர் பலரும் " பேச்சில் மணியே எழுத்தில் மணியே ! குணத்தில் மணியே ' என்றெல்லாம் அக்காலத்தி லேயே பாராட்டி யிருக்கிருர்கள். காவேரிப்பாக்கம் நமச்சிவாய முதலியார் இவரிடம் பேரன்பு கொண்டி ருந்தார். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. வும் இவரும் இணையில்லா நண்பர்களாக வாழ்ந்து வந்தார்கள். அந்தப் பேராசிரியரிடம் தமிழ் கற்றவர்கள் ஆயிரக்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/70
Appearance