கமச்சிவாய முதலியாரும் நானும் o, I அந்தக்காலத்துப் புலவர்கள் எந்தப் பேச்சிலும் எதுகை மோனைகளைக் கலந்து பேசுவதையே பழக்கம்ாகக் கொண்டிருந்தனர். அவர்கள் எதைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் என்பது எனக்குத் தெரிய வில்லை. நாங்கள் அங்கே சென்றபோது நமது முதலி யார் அவர்கள் தமக்கு அருகே இருந்த ஒரு புலவரைப் பார்த்து, " நீங்கள் இவ்விதம் ப்ேசுவது சிறிதும் அடாது ' என்று சிரித்துக் கொண்டே கூறினர். உடனே மற்ருெரு புலவர் உங்கள் பேச்சு இங்கே சிறிதும் எடாது என்று கூறினர். இதைக் கேட்ட மற் ருெரு புலவர் "நீங்கள் அவரை அவ்விதம் சொல்லப் I என்ருர். உடனே பிறிதொருவர் "நாம் 7 لتmgـالا என்ன சொன்னுலும் அவர் உள்ளம் சுடாது" என்ருர். பிறகு இவ்விதமே ஒவ்வொருவரும் தொடர்ந்து, இடாது, விடாது என்றெல்லாம் எதுகைமேல் எது கையோடு பேசிக்கொண்டே சென்ருர்கள். உடனே நமது முதலியார் “இதனை இவ்வளவோடு விடுங்கள். வேறு எதையாவது பேசுவதற்கு எடுங்கள் ” என்ருர், அதே சமயத்திலே இதைக் கேட்டுக்கொண்டே வந்த ஒரு பெரிய மனிதர் நல்லது புறப்படுங்கள் என்ருர். அப்போது நமச்சிவாய் முதலியார் எங்கே புறப்பட வேண்டும் ? கட்டளை இடுங்கள் என்ருர். அப் பெரிய மனிதர் அப்போது ஒர் அழைப்பிதழை அவரிடம் காட்டினர். அதைப் பார்த்ததும் நமது பேராசிரியர் அடடா நான் மறந்தே போனேன் , இந்த விருந்தை எல்லோரும் உடனிருந்து அருந்த வாருங்கள் என்று சொல்லிக்கொண்டே எழுந்தார். எழுந்தவர் எங்கள் ஆசிரியராகிய மணி அரசர் தோள்மீது கையைப்
பக்கம்:நித்திலக் கட்டுரை.pdf/57
Appearance