பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

109


முஸ்லிம், முஸ்லிமல்லாதாரின்
மனத்தை வருத்தக் கூடாது

ஒரு முஸ்லிம் முஸ்லிமல்லாதாரின் மனத்தை எக்காரணம் கொண்டும் வருத்திவிடக் கூடாது என்பது இஸ்லாமியக் கொள்கை, கோட்பாடுகள் மட்டுமின்றி பெருமானாரின் வாழ்வையும் வாக்கையும் நமக்கு உணர்த்தி வழிகாட்டும் ஒளிவிளக்காக அமைந்துள்ள ஹதீஸ்கள், இன்றும் இதை நமக்கு எடுத்துக்கூறி விளக்கி வருகின்றன.

அலி(ரலி) அவர்கள் எப்போதுமே இஸ்லாமிய உணர்ச்சி மிக்கவர்; துடிப்புமிக்க முஸ்லிமாவார். ஒரு சமயம் சாலை வழியே நடந்து சென்றார். சிறிது தொலைவில் இவருக்கு முன்னதாக யூத சமயத்தைச் சேர்ந்த யூதர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். ஒரு யூதருக்குப் பின்னால் அவரைப் பின்தொடர்ந்து செல்பவராக சாலையில் பின்னால் நடக்க விரும்பாமல் விரைந்து நடந்து, அவரை முந்திச் செல்ல முனைந்து தன் நடையை விரைவுபடுத்தினார். தான் விரும்பியவாறே யூதரைக் கடந்து அவருக்கு முன்னால் செல்பவராக முந்திச் சென்றார். வேகமாக நடந்து வந்ததால் மூச்சு இரைக்க பெருமானார் முன்வந்து நின்றார், தன்முன் அலியார் மூச்சு இரைக்க வந்து நின்ற காரணத்தை அலியார் மூலமே கேட்டறிந்த அண்ணலார் மிகவும் மன வருத்தமடைந்தார். அலியாரின் செயல் பெருமானாருக்கு வேதனையளித்தது. மாற்றுச் சமயமான யூத சமயத்தவர் என்ற வெறுப்புணர்வால் அவரைப் பின்னுக்குத் தள்ளி முன்னேவர முனைந்த செயல் தவறானது. இதனால் அந்த யூதர் மனம் வேதனைப்பட்டிருக்கலாம். எனவே, அவரிடம் உடனே அலி (ரலி) சென்று, தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டுவர வேண்டும் எனப் பணித்தார். அண்ணலாரின்