உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருதாணி நகம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதாணி நகம் 91

பஞ்சவர்ணத்தின் இதழ்க்கங்கில் நீண்டபொழுது கழித்து, மலர்ச் சிரிப்பு தவழத் தொடங்கியது. அவள் கோவிந்தம்மாவைப் பார்த்தாள். அவளும் நகைபூத்த நங்கையாளுள் முளைத்த குதுகலக் களிப்பில், ஏதோ ஒன்றைக் கெலித்துவிட்ட கருவம் அவள் வதனத்தில் நிழலாடியது, விதியை வென்ருளா ? வேதனையைக் கெலித்தாளா? இல்லை, அவளுடைய புது மோகத் தவிப் பைத்தான் ஜெயித்தாளா ?

தோழியின் கன்னத்தைக் கிள்ளிச் சிரிப்புச் சிந்தி ளுள் தோழி ! -

முத்தையனைப் பெற்ற தாய் வாசலில் கிடந்த சாணி பொறுக்கி, குப்பைமேட்டை வசமாகக்கொண்டு வீசிக் கொண்டிருந்தாள். உழைத்த மேனி ஒயுமா, பின்னே?

" அயித்தை!” என்ருள் பஞ்சவர்ணம். விட்ட சொந்தத்தைத் தொட்ட உணர்வால் அவள் மேனி நடுங்கியது.

கிழவி அவளை இமைக்காமல் விழி பிதுங்கப் பார்த்த வாறே நின்ருள். பின்னர், அண்டிவந்து பஞ்சவர்ணப் பதுமையின் பதும முகத்தை அலுங்காமல் தொட்டு நிமிர்த்தினுள். "ஆத்தாடி! எங்க பெரிய அயித்தை பேத்திப் பொண்ணில்ல... பஞ்சவர்ணமில்ல!” என்று மகிழ்வின் அலைகளில் நீந்தினுள் முதியவள் சீரங்கம்.

"ஆமாங்க, அயித்தை !”

" காத்திகைப் பொறை கண்டதுமாதிரி இருக்குதே ஒன்னைக் கண்டடியும் மேலுக்குச் சொகமா இருக்கியா?"

"ஆமாங்க, அயித்தை!” என்று அவள் பதில் மொழிந்து கொண்டிருந்த சமயம், உள்ளேயிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மருதாணி_நகம்.pdf/93&oldid=611998" இலிருந்து மீள்விக்கப்பட்டது