பக்கம்:சங்க கால மகளிர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35

என்று சொன்னபொழுது மறாது உடன்பட்டெழுந்தேன்” என்று குறிப்பிடுகின்றாள் :

போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும்
மாற்றா உள்ள வாழ்க்கையள் ஆதலின்

ஏற்றெழுங் தனன்யான்.[1]

“பரத்தையர்பாற் சென்று தங்குபவனை அங்ங்ணம் சொல்லாமற் காத்தலும், சென்றானென்று நீக்கியொழுகுதலும் மனைவியாற் கூடுமோ? கூடா. சால்புமிக்க கற்புடை நங்கையர் தம்மைக் கணவர் இகழ்ந்தாலும் தாம் அவரைப் போற்றுவர்” என்று பரிபாடலில் நல்லந்துவனார் பண்புரை பகர்ந்துள்ளார்:

சேக்கை யினியார்பாற் செல்வான் மனையாளாற்
காக்கை கடிங்தொழுகல் கூடுமோ கூடா
தகவுடை மங்கையர் சான்றாண்மை சான்றார்

இகழினும் கேள்வரை யேந்தி யிறைஞ்சுவார்.[2]

குடிப்பிறந்த ஒழுக்கம் தலைவிமாட்டுச் சிறந்தொளிர்ந்தது என்பதற்கு மேலும் பல சான்றுகளைக் காட்டலாம். தன்னுடைய செல்வமனையில் செல்வக் குடியில் பிறந்த தன்னைப் பெற்ற தாய் ஒருபுறம் வீற்றிருப்ப, பிறிதொரு புறம் தன்னை வளர்க்கும் தாய் தேன் கலந்த பாற்சோற்றினைப் பொற் கிண்ணத்தில் வைத்துக்கொண்டு, சிறுகோலோச்சி அச்ச மூட்டவும், செல்வக் குடியிலே பிறந்த குழந்தையாதலால் பசியற்ற காரணத்தால் உண்ண மறுத்துக் காற்சிலம் பொலிப்பத் தோட்டத்துப் பந்தலில் ஓடிஓடி இளம் பருவத்தில் விளையாடிய தலைவி, இற்றை நாளில் புகுந்த வீட்டிலே வறுமை தாக்கித் தான் வாடியபொழுதும், தந்தை


  1. சிலப்பதிகாரம்: கொலைக்களக்காதை: 81-83.
  2. பரிபாடல்: 20: 86-89