பக்கம்:வாழும் வழி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

23




3. ‘தமிழ்நாட்டு வில்சன்’

உலகம் ஒன்றுபட வேண்டும் என்பது அறிஞர்களின் ஆவல். இது அன்று மட்டுமன்று - இன்று மட்டுமன்று என்றுமே இருக்கும் ஆவல் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், சாதியாலும் சமயத்தாலும் பல பிரிவினராயிருப்பினும், தமிழர் என்னும் பெயரால் ஒன்றுபடுகிறார்கள். பல மொழியினருக்கு நடுவிலே இவர்கள் தம்மைத் ‘தமிழர்’ என்னும் பெயரால்தானே தெரிவித்துக் கொள்ளவேண்டும்? இது போலவே, தமிழன், தெலுங்கன், வங்காளி, குசராத்தி முதலியேர் ‘இந்தியர்’ என்னும் பெயரால் ஒன்றுபடுவர் பிற நாட்டினர் நடுவிலே. இந்தியன், பர்மியன், சீனன் முதலியோர் ஆசியாக் கண்டத்தினர் என்னும் பெயரால் ஒன்றுபடுவர் பிற கண்டத்தாரின் நடுவிலே. இவ்வொற்றுமை நிலையினை இங்கு நான் கட்சி பற்றியோ, மதம் பற்றியோ வகுக்காமல், அரசியல் பற்றியே வகுத்தேன். ஆசியன், ஐரோப்பியன், அமெரிக்கன் முதலிய எல்லாக் கண்டத்தாரும் ஒன்றுபட்டால் உலகம் ஒன்றுபட்டதாகப் பொருளல்லவா? இந்த ஒற்றுமையை, ஒரே மதமோ, ஆட்சியோ உலக முழுவதும் பரவின் உண்டாக்கக் கூடும். அல்லது, வேறு மண்டலமாகிய ‘செவ்வாய்க் கிரகம்’ போன்ற இடத்திலிருந்து நம் உலகத்திற்கு எதிர்ப்புத் தோன்றுமாயின், எல்லாக் கண்டாத்தார்களும், ‘பூவுலகத்தார்’ (பூமியார்) என்னும் பெயரால் ஒருவேளை ஒன்றுபடலாமோ என்னவோ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/25&oldid=1104132" இலிருந்து மீள்விக்கப்பட்டது