18
1870 லிருந்து 1889 முடிய உள்ள பத்தாண்டுகளிலே நூலக ஆணைக் குழுவின் தொகை 153 ஆக அதிகரித்து விட்டது. அடுத்த பத்தாண்டுகளிலே இந்த எண்ணிக்கை இருமடங்காகி விட்டது. 1946ல் 600-க்கு மேற்பட்ட நகர், சிற்றுார் நூலக ஆணைக் குழுக்கள் பணியாற்றத் தொடங்கின. அதுகால் இங்கிலாந்து, அயர்லாந்து ஆகிய இரு நாடுகளின் மக்கள்தொகை 48,000,000. இவர்களிலே 350,000 பேர்தான் பொது நூலகமில்லா ஊர்களிலே வாழ்ந்தனர். பொது நூலகமில்லா ஊரே இருக்கக் கூடாதுதான். ஆனால் இதற்கு முப்பதாண்டுகளுக்கு முன்னல் பாதி மக்கள் பொது நூலகமற்று வாழ்ந்தார்கள் என்பதை எண்ணுகின்றபொழுது, 1919 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பொது நூலகச் சட்டத்தினால் நூலகத் துறையிலே ஏற்பட்ட முன்னேற்றம் தெளிவாகத் தெரியத்தான் செய்கிறது.
சிற்றூர் ஆட்சி மன்றங்களாலும், ஊர் ஆட்சி மன்றங்களாலும், நகராட்சி மன்றங்களாலும் தற்போது பொது நூலகங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பொது மக்கள் தரும் வரிப் பணத்திலிருந்து ஒரு பகுதி இந்த நூலகங்களுக்காகச் செலவிடப்படுகின்றது.
நகராட்சி மன்றங்களும் சிற்றூராட்சி மன்றங்களும் பொறுப்பு மிகவுடையன அவையாற்ற வேண்டிய கடமைகளும் பல. எனவே அவற்றைச் சரிவரச் செய்வதற்காகப் பற்பல குழுக்கள் ஒவ்வோர் ஆட்சி மன்றங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய குழுக்களில் ஒன்று கல்விக்குழு. அக் கல்விக் குழுவிலுள்ள உட்குழுக்களுள் ஒன்றே பொது நூலகக் குழு. இக்குழு நூலகத்தின் இன்றியமையாமை, தேவை ஆகியவற்றை ஆட்சி மன்ற-