பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவுதலைத் தரும் என உறுதி தூக்கத் தூங்கி, அறிவே சிறிதுநளி விரையல் என்னும், ஆயிடை ஒளிறேந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய் புரிப் பழங் கயிறு போல வீவது கொல் என்வருந்திய உடம்பே."

                        -நற்றிணை:284.

அக வாழ்க்கையில் அன்பு காட்டி வாழ்ந்த பழந்தமிழ் மக்கள், புறவாழ்க்கையில் பேராண்மை புலப்பட வாழ்ந்தனர். தம் அகவாழ்வு அமைதி நிறைந்த பெருவாழ்வாக விளங்க வேண்டும் என்று விரும்பிய அவர்கள், ஆங்கு அவ்வமைதி நிலவ வேண்டின், தம் புற வாழ்விலும் அமைதி நிலவ வேண்டும் என்ற உண்மையை உணர்ந்திருந்தனர்.

எந்த நாடு, செல்வத்தால் சிறந்து விளங்குகிறதோ, அந்த நாட்டிலேயே அகவாழ்வு அமைதி நிறைந்த பெருவாழ்வாக விளங்கும். பண்டைக் காலத்தே தமிழ் வழங்கும் நாடு மட்டுமே செல்வத்தில் செழித்துத் திகழ்ந்தது: அதைச் சூழ உள்ள நாடுகள் எல்லாம், அத்துணை வளம் செறிந்து விளங்கவில்லை. காடும், மலையும், காட்டாறுகளுமாய்க் காட்சியளித்து வளமறியாது விளங்கிய அந்நாடுகளில் வாழ்ந்த மக்கள் கூட்டம் கூட்டமாகத் தமிழ்நாட்டுள் நுழைந்து கொள்ளையிட்டுச் செல்லத் தலைப்பட்டனர். கோசர் மழவர், வடுகர், களப்பாளர் போன்ற நாடோடிக் கூட்டங்களும் ஆரியர், மோரியர் போன்ற வடநாட்டு அரச இனத்தவரும் தமிழகத்துள் புகுந்து போரிட்டுத்