உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய வளர்ச்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

பாடிய ஆசிரியர் இளங்கோவடிகளால், நூலின் தொடக்கத்தே இவற்றையே வழிபட்டுள்ளமையும் உணர்க:

“திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கு அலர்தார்ச் சென்னி குளிர்வெண்குடை போன்றுஇவ்
அங்கண் உலகு அளித்தலான்!”

“ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேருவலம் திரிதலான்!”

“மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
நாமநீர் வேலி உலகிற்க்கு அவன் அளிபோல்
மேல் நின்று தான் சுரத்தலான்.”

இவ்வாறு தம் ஆக்கம் வளர அருட்டுணை புரிந்த கொடி நிலை, கந்தழி, வள்ளி பேன்ற இயற்கைகளையும் கொற்றவை போலும் வெற்றித் திருமகளையும் வணங்கி, வழிபட்டு வாழ்ந்த தமிழ் மக்கள், சங்க காலத்திலேயே மாயோனையும், சேயோனையும், வருணனையும், இந்திரனையும், ஏறு ஊர்ந்தோனையும், பனை ஏந்தியோனையும் அறிந்து வழிபடத் தொடங்கியிருந்தனர். மாயோனையும், சேயோனையும் அவர்கள் அறிந்திருந்தனர் என்றாலும் அக்கடவுள் வழிபாடு, அக்காலத்தே அவரிடையே அத்துணை ஆழமாக இடம் பெறவில்லை.

சங்க காலத் தமிழ் மக்கள், அழிவறியாப் பெருவாழ்வு பெற்றிருந்தமையால், இறை வழிபாட்டினை அத்துணை இன்றியமையாததாகக் கருதவில்லை. கடுந்துயர் உறும் காலத்திலேயே, கடவுள் வழிபாட்டில் கருத்துடையராதல் உலக மக்கள் அனைவர்க்கும் ஒத்த இயல்பாம். தமிழ்