பக்கம்:தமிழ்ப்புலவர் சரித்திரம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4.30 பட்டுள்ளது. அதன்கட் கூறியாங்குச் செந்தமிழ்ப் புலவர் தஞ் சீரிய சரித மெழுதும் ஆற்றல் படைத்த பெரியார், பண்டுதொட்டு இன்றளவு தோன்றிய தலை சிறந்த தமிழ்ப் புலவர்தம் புலமையெல்லாந் திரண்டோ ருருவெடுத் தாற்போல விளங்கும் செந்தமிழ்ப் பேராசிரியர் மகாமகோபாத்தியாய Dr. 2. வே. சாமிநாத ஐயர் அவர்களே யென்பது தேற்றம். இவ்வுண்மை யைப் பலவாண்டுகளுக்கு முன்னரே ஆசிரியர் கண்டதிக்செழுதியது பெரிதும் பாராட்டற்பாலது. செந் தமிழை முன்னேற்றக் கருதி அரும்பெரும் பாடு படும் செல்வர்கள் பலரும், புலவர் சிந்தாமணியாகிய ஸ்ரீமகாமகோபாத்தி காய ஐயர் அவர்கட்கு உதவித்துணையாக வேறு சில தக்க புல்வரை யமைத் துக் கொடுத்து, அன்னார் தம் மனக்குகையுட் பொதிந்துகிடக்கும் பெறலரும் மணிக்குவைகளாகிய தமிழ்ப் புலவர் வரலாறுகளை வெளிப்படுத்த முயல்வ ராயின், அது தமிழகஞ் செய்த பெரும் தவப் பயனாம். ஆசிரியர்தம் நூல்கள் பலவற்றையும் தனித் தனியாயும் ஒரு சேரத் தொகுத்தும் குறிப்பு/கரை முதலியவற்றோடு வெளியிடக் கருதி, அன்னார் தங். குமாரர் சிரஞ்சீவி வி. சூ. சுவாமிநாதன் அவர்கள் எடுத்துக்கொண்ட நன் முயற்சி பலவும் இடை யூ மின்றி இனிது நிறைவேற எல்லாம் வல்ல இறை வன் திருவருள் புரிவாராக. அண்ண ம் ல நகர், ) 7-10-1933, X இங்ஙனம், ந. பலராம ஐயர்