உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.94 முருகன் காட்சி

பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய மூவிரு திருமுகத் தொருவே லவற்கு

-- - கல்லாடம் : 7:7.8 என்று குறிப்பிடுகிறது. பிணிமுகம் என்பதற்கு முருகக் கடவுள் ஊரும் யானை’ என்றும் பொருள் உரைப்பர், இதனைச் சேயுயர் பிணிமுக மூர்ந்து என்று பரிபாடல் கூறும். ---

இறுதிப் பாட்டில் மலையினைச் சூழவரும் அசுரனின் நெஞ்சு பிளக்கக் கிரவுஞ்ச மலையினை அழித்த நெடிய வேல்; சரவணப் பொய்கையில் தாமரை மலர்ப் படுக்கையில் கார்த்திகைப் பெண்டிராம் தாய்மார் அறுவரின் திருமுலைப் பாலினை உண்ட முருகனுடைய அழகிய கையிலுள்ள வேலேயாம் என்று குறமகளிர் துதித்து நிற்கின்றனர்:

சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர் திருமுலைப்பால் உண்டான் திருக்கைவே லன்றே வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து குருகுபெயர்க் குன்றங் கொன்ற நெடுவேலே.

-சிலம்பு : குன்றக் குரவை : 1.0 சரவணப் பூம்பொய்கையில் கார்த்திகைப் பெண்டிரால் திருமுருகன் வளர்க்கப்பட்ட செய்தியினை,

நெடும் பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ

- திருமுருகு : 253.55

என்று திருமுருகாற்றுப்படை பேசுகின்றது. குருகு பெயர்க்

குன்றம் கொன்றோன்’ என மணிமேகலை முருகனைப்

பற்றிக் குறிப்பிடுகின்றது.

வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும் ஆலமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால் மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/96&oldid=585985" இலிருந்து மீள்விக்கப்பட்டது