66
இலக்கிய அமுதம்
யீடு களப்பிரர் இடையீடு' என்று வரலாறு குறிக். கின்றது. கூ ற்று வ நாயனர் என்பவர் சோழ நாட்டைப் பிடித்து ஆண்ட களப்பிரர். பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆண்டனர் என்றும் பிறகு கடுங்கோன் என்பவன் அவர்களை வென்று ஆட்சி செலுத்தினன் என்று சின்னமனூர்ச் செப்பேடு செப்புகின்றது.
ங்ங்னம் வரலாற்று விவரங்களைக் காணப் பெரிய புராணத்தில் பேசப்படும் நாயன்மார் காலம் ஏற்த்தாழக் கி.பி. 300-860 என்று சொல்லலாம். இப்பரந்துபட்ட காலத் திற் கு ஸ் அறுபத்துமூவர் வாழ்ந்து மறைந்தனர். அதாவது, நாயன்மார் அனைவரும் பல்லவர் காலத்தினர். அவர்களைப் பற்றிப் புராணம் பாடிய சேக்கிழார் பிற்காலச் சோழர் காலத்தினர் (கி.பி. 1135-1150). எனவே, சேக்கிழார் இந் நாயன்மார்க்குப் பல நூற்ருண்டுகள் பிற்பட வந்தவராவர். அப்படி இருந்தும், வரலாற்றுக் காலத்திற்குப் பழுது உண்டாகாதபடி சேக்கிழார் பாடியிருத்தல் அவரது ஆராய்ச்சித் திறனையும், பொறுப்புணர்ச்சியையும் நன்கு விளக்குவதாகும்.
பெருங்காவியம்
பெரிய புராணச் செய்திகளைச் சேர்க்க இவ்வாறு அரும்பாடு பட்ட சேக்கிழார், அச்செய்திகளை முறைப் படுத்தி, ஒரு பெருங் காவியமாகப் பாடி முடித்தது, அவரது இணையற்ற புலமைக்குச் சிறந்த சான்ருகும். சேக்கிழார் இந்நூலுள் சுந்தரர் வரலாற்றை நூலின் முதல்-இடை-கடைகளில் வைத்தும் சுந்தரரர்ல் குறிக்கப் பெற்ற நாயன்மார் வரலாறுகளை இடை. யிடையே வைத்தும் சென்றதை நோக்க, கர்வியத். தலைவர் சுந்தரர் என்பது தெளிவாகப் புலனுகும். சுந்தரரது திருத்தொண்டத் தொகை பிறந்ததும். பரவையார் காதல் மணம் நிகழ்ந்ததும் ஆகிய திருவாரூரே நகரமாகக் கொள்ளப்பட்டு ந்கரச் சிறப்பும், அந்நகரைத் தன் அகத்தே கொண்டதால்,