50 முருகன் காட்சி
தென்தமிழ் கன்நாட்டுத் தீதுர்ே மதுரை --
-சிலப்பதிகாரம் : 10 : 58 என்னும் சிலப்பதிகாரத் தொடரும்,
தென்தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்
-மணிமேகலை : 25 ; 139
- - : *
என்னும் மணிமேகலைத் தொடரும் மேற்கூறிய கருத் தினையே அரண் செய்கின்றன.
மதுரையில் வாழ்வோர் அறத்தான் வருவதே இன்பம்’ என்று வாழ்வோர்; வணிகரும் அறக்கூறு பாட்டின் திறத்திலேயே பொரு ளிட்டுகின்றனர்.
அங்காடிகள் அனைத்திலும் திரு வீற்றிருக்கின்றது. எங்கும் செல்வம் நிரம்பிய மாடமாளிகைகள் நிறைந்து தோன்றுகின்றன:
திருவிற் றிருந்த தீது தீர் நியமத்து மாடமலி மறுகிற் கூடல்.
■ -திருமுருகு ; 70-71 அங்காடித் தெருக்களில் தீது தீர்ந்து கிடக்கின்றமை யாவது வாணிபத்தில் வஞ்சகச் செயல் ஏதும் நுழைந்து
அதனைப் பாழ்படுத்தி விடாமையாகும். இதனை,
தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வது உம் மிகைகொளாது கொடுப்பதும் -
(குறைகொடாது. பல்பண்டம் பகர்ந்து வீசும்
-பட்டினப்பாலை: 209-211
என்னும் பட்டினப்பாலை அடிகளால் அறியலாம்.
அடுத்து, ம து ைர ைய ப் பற்றிப் பிறிதொரு தொடர்பும் இலக்கியத்தில் குறிக்கப் பெறுகின்றது. அது நான்மாடக்கூடல்’ என்பதாகும்.
மாடமதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனற் புகாரும்