16. எண்கள்
21
14. உலகங்கள் [32]
1. மண்ணுலகம்:- அகல நீளம் உள்ளது. கடலாற் சூழப்பெற்றது. ஊழி கண்டது; ஊர்கள் நிறைந்தது; கார்கள் வாழ்வது; சூரியன் இயங்குவது; துயர் நிறைந்தது.
2. விண்ணுலகம்:- அகல நீளம் உள்ளது; பொன்னுலகம், மேலுலகம் என்னும் பெயர்களைக் கொண்டது; அந்தரத்துள்ளது; அமரர் வாழ்வது ; மேன்மை பொருந்தியது, நல்ல உலகு; குற்றம், நடுக்கம் இல்லாத உலகு ; இதன் புகழ் கீழுலகத்திலும் பரவியுள்ளது.
3. உலகுகள்:- பூமி முதலிய ஏழுலகுகள் உண்டு. மூவுலகுகள் என்றும் சொல்லுவதுண்டு. பரலோகம், புவலோகம், மாலோகம் என்பன லோக வகைகள்.
4. சிவலோகம்:- இஃது ஈசன் இருக்கும் உலகு. இங்கு துஞ்சுதல் (இறத்தல்) கிடையாது. சித்திர விமானம் உள்ள செல்வம் நிறைந்த உலகு.
15. ஊழி, ஊழி முதல்வர் [60-61]
உலகிலே பல ஊழிகள் தோன்றும். உக முடிவில் ஓருயிரும் வாழ முடியாத வண்ணம் கடல்நீர் பொங்கிப் பரவிப் பாய்ந்து ஊர்களை அழித்து உலகை மூடும். அப்போது அமரர்கள் ‘எந்தாய்’ என இறைவனைச் சரண் புகுவர். இறைவர் (பிரளய கால மூர்த்தி) இருவருடைய (மால் - பிரமன் உடைய) உடற்பொறையுடன் திரிவர். பின்பு, பண்டுபோல எல்லாம் பண்ணுவர். ஊழிக் காலத்தும் வாழும் பெருமான் நமது பெருமான்.
16. எண்கள் [39]
ஒன்று முதல் பத்து வரையும், பன்னிரண்டு, பதினாறு, பதினெட்டு, இருபது, இருபத்திரண்டு, எண்பத்துநான்கு, நூறு, ஆயிரம், நூறாயிரம், பல்லாயிரம், கோடி, முக்கோடி, பல்கோடி, தோழம் என்னும் எண்கள் கூறப்பட்டுள.