23. கலைமகள்
23
யானது, பெரியது, பொங்குந் தன்மையது, கற்களை உடையது, திரை வீசுவது, மேகம் படிவது, கப்பல்கள் தன்மீது தவழப்பெற்றது. மகரம், மீன், சுறவம் முதலிய கடலுள் வாழ்வன. ஏழ்கடல், பாற்கடல் என்பன கூறப்பட்டுள.
கடலிற் கிடைப்பன:- இப்பி, சங்கு, பவளம், முத்து, பொன், மணி, வயிரம். (ஆறுகளின் சந்திப்பால் அகிற்பிளவு, சந்து, கரியின் மருப்புங் கிடைக்கும்.)
கடல் சார்ந்தவை:- ஓதம், கழி, கானல்.
திரை வர்ணனை:- போர்புரிவன போலவும், மலை போலவும், விண்ணளாவி, இரைந்து, நுரைபெருகிக் கரை பொருதுப் பெருகி வருவன திரைகள்.
கடலொலி:- மண முரசுபோல முழங்கும்.
கானல்:- கானலில் கலைமான்கள் விளையாடும்.
கடற்புறத்துத் தலங்கள்:- தலைப்பு 86 பார்க்க.
கடற்புறத்து மரங்கள்:- தலைப்பு 143 பார்க்க.
21. கலி [55]
கலியின் வன்மையால் நல்லன அழியும்; நல்லொழுக்கம் நிலைத்தல் அரிது; கலை ஞானத்தாலும், கற்றாங்கு எரியோம்பு ஒழுக்கத்தாலும், ஈகைக் குணத்தாலும் கொடிய கலியையும் வென்றுநின்ற பெரியோரும், மறையோரும் தமது காலத்தில் விளங்கினார்கள் என்று ஞானசம்பந்த சுவாமிகள் கூறுகின்றார்.
22. கலை [56]
கலைகள் அறுபத்து நான்கு. சுவாமிகள் காலத்தில் கலையின் மேவு மனத்தார் பலர் இருந்தனர். கலை கற்கின்ற ஒலி ஊர்களில் கிரம்பி இருந்தது. மாதர்களும் கலை கற்று வந்தனர். கலைகள் பொழில்களிற் கற்பிக்கப்படும்.
23. கலைமகள் (சரஸ்வதி) [157]
நாமகள், நாவினாள் என்னும் பெயரினள் கலை மகள். சீகாழியிற் பிரமன் நாமகளொடு ஈசனை வழிபட்டான்.