பக்கம்:பாட்டும் தொகையும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாட்டும் தொகையும்

பிணிக்கும் காலை இரங்குவிர் மாதோ நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்: அதுதான் எல்லாரும் உவப்பது அன்றியும் கல் ஆற்றுப் படுஉம் நெறியும்மார் அதுவே

-புறநானுாறு : 195

அறக்கருத்து என்பது எல்லாராலும் பின்பற்றக் கூடியதாக அமைந்தால்தான் அதை மக்கள் பின்பற்ற முடியும். பின்பற்றமுடியாத கட்டுத்திட்டங்கள் அமையு மானால் அவை உடைத் தெறியப்படும் என்பது உலகம் கண்டதுண்டு. சமண, பெளத்த மதங்களின் அழிவுக்கு அதன் கொடுமையான கட்டுத்திட்டங்களே காரணம் என்பது யாரும் அறிந்ததே. இவ் அடிப்படையில்தான் இப்பாட்டிலும் கூறப்பட்டிருக்கிறது. மக்களை விளித்து, நீர்மேற்குமிழியான இவ் உலக வாழ்க்கை என்று முடியும் என்று யாராலும் கூறமுடியாது. திடீரென முடிந்துவிடும். அப்போது வருந்திப் பயனில்லை. ஆதலின் இப்போதே அறங்கள் செய்யுமின்; நல்லதைச் செய்யுங்கள்; நல்லது செய்ய முடியாவிட்டால்கூட நல்லதல்லாதவற்றைச் செய்யாமலிருங்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உலகம் இன்புறும். எல்லாரும் விரும்பும் செயலும் இதுதான். நல்லநெறியும் இதுதான் என்று கூறுகிறார். “நல்லது செய்யுங்கள்: செய்யமுடியாவிட்டால் அல்லது செய்யா தீர்கள்’ என்று கூறுவது பெரிதும் போற்றற்குரியது.

கழைதின்யானையார் பாடிய பாடலில் உயர்ந்த வாழ்க்கைத் தத்துவம் ஒன்று கூறப்பட்டுள்ளது. எல்லா வளமும் பெற்றவர்கள் உலகில் சிலரே. பலர் பல வளங்கள் பெறாமல் இருப்பதுண்டு. இதனால் ஒருவருக்கொருவர் கொடுப்பதும், வாங்குவதும் இன்றியமையாததாகிறது. இது பண்டமாற்றுப் போன்றது, தான் கொடுத்ததைத் திரும்ப வாங்கிக்கொள்வது. ஆனால் திரும்பப் பெறாத