48 முருகன் காட்சி
தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சிற்
றடப்பெரு நொச்சியும்
- திருநாகைத்,திருநகரம் : 90
என்றும் வரும் இலக்கியச் சான்றுகள்ால் தெளியலாம். இது போன்றே,
செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில் கோள்வல் முதலைய குண்டுகண் அகழி வான் உற ஓங்கிய வளைந்துசெய் புரிசை
-பதிற்றுப்பத்து : 53:6.9
என்ற பதிற்றுப்பத்து அடிகளுக்கு, சிலம்பும் தரையும் புரிசைக்கண் தங்கின வென்றது, ஈண்டுப் பொருiருளிரேல் தும் காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடை யினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்த வாரென்க: என்று பதிற்றுப்பத்தின் பழைய உரைகாரர் எழுதிய விசேட வுரை இங்கு ஒப்பு நோக்கி உண்மை உணர்தற்குரியதாகும். குன்றமர்ந்து உறைதலும் உரியன்
மதுரை மாநகரம் வரலாற்றுப் புகழ் வாய்ந்தது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக முச்சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டியர் பரம்ப்ரையால் ஆளப் பெற்றது. பழைய தமிழ்ப் புலவர்கள் மதுரையைப் பற்றிக் குறிப்பிடும்பொழுதெல்லாம் அ த ைன த் தமிழோடு தொடர்புபடுத்தியே பேசுகின்றனர். புலத்தினும் போரிலும் வெல்ல முடியாத கூடல் என்று மதுரை சிறப்பித்துப் பேசப் படுகின்றது.
தண்தமிழ் வேலித் தமிழ் நாட்டகம் எல்லாம்
நின்று நிலைஇப் புகழ்பூத்தல் அல்லது
குன்றுதல் உண்டோ மதுரை
என்னும் பரிபாடலின் மிகைப் பாடலும்,