உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 . முருகன் காட்சி

வீசியடித்துக் கொண்டு வருகின்றது அழகுசால் அருவி, பெரிய யானையினுடைய முத்தையுடைய வாய் தந்தங் களை உள்ளடக்கி, நல்ல பொன்னும் மணியும் என்பன வற்றின் நிறம் விளங்கா நிற்கத் தாவிப் பொன்னைக் கொழித்து, வாழையினது இளநீரையுடைய சிறந்த குலை உதிரவும் அவ்விரண்டினையும் தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயவும், புள்ளியை யுடைய முதுகினையும் மடப்பத்தையுடைய நடை யுனையினையுமுடைய மயில் பலவற்றுடனே கோழி யினுடைய வலிவுள்ள பெண்கோழி அஞ்சி நிலை கெடவும், ஆண்பன்றியுடனே, வெளிற்றினையுடைய கரிய பனையின் புல்லிய செறும்பை யொத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையும் உடைய கரடி பெரிய பனையின் பிளவுகளிலுள்ள முழைஞ்சுகளிலே நெருங்கிச் சேரவும், கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுக்களின் சிறந்த ஏறுகள் முழங்கும்படியும், மிகவுயர்ந்த மலையுச்சியி லிருந்து இழும்” என்னும் ஒசையுண்டாகும்படி குதிக் கின்ற அருவியையுடைய பழமுற்றின சோலைகளை யுடைய மலைக்கு உரிமையுடையவனாகிய முருகக் கடவுள், தெய்வஞ் சான்ற திறல் விளங்கு உருவோடு, வான்தோய் நிவப்பில் தான் வந்து எய்தி, பண்டைத் தன் மணங்கமழ் தெய்வத்தின் இளநலங்காட்டி அஞ்சல் ஒம்புமதி அறிவன் நின்வரவு’ என அன்புடை நன்மொழி கூறிப் பெறலரும் பரிசில் நல்குவான்:

வேறுபல் துகிலின் நுடங்கி யகில்சுமந்து ஆர முழுமுத லுருட்டி வேரல் பூவுடை யலங்கு சினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த தண்கமழ் அலரிறால் சிதைய நன்பல ஆசினி முதுசுளை கலாவ மீமிசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/80&oldid=585968" இலிருந்து மீள்விக்கப்பட்டது