வள்ளலார் காட்டும் முருகன் 1 1 7
தாது ஒதியுணர்ந்தார் என்றும் குறிப்பிடுகின்றது. அப்பகுதி மட்டும் ஈண்டு அகழ்ந் தெடுத்துத் காப்படுகின்றது.
அறையினை அடைந்த நம் பிள்ளைப் பெருமானார் தெய்வ ஆராதனைக்கு வேண்டிய திருவிளக்கு, பழம், ருெமலர், சாம்பிராணி, வத்தி, கற்பூரம், கற்கண்டு முதலியவற்றைச் சேகரித்துக்கொண்டு அவ்வறையிலே திருவிளக்கை ஏற்றி, ஒரு கண்ணாடியைச் சுவரில் மாட்டி, அக் கண்ணாடிக்கு மாலைசூட்டி, பழம் படைத்து, கற்பூரம் காட்டி, கண் இமை கொட்டாது அதனையே உற்று நோக்கினார். அக்கண்ணாடியில் சிறிது நேரத்திற்கெல் லாம் திருத்தணிகைக் கந்தப்பெருமான் திருவுருவம் தெரியலாயிற்று.
தனிகைமலை மீதுறையும் அணிகொள் சேவம் கொடியோனாம் முருகப்பெருமானைத் தம் முன்னே கண்டவுடன் இராமலிங்கரின் உள்ளம் பொங்கியது; களிநடமிட்டது; கவிதை மழையும் பொழிந்தது:
சீர்கொண்ட தெய்வ வதனங்கள்
ஆறும் திகழ்கடப்பந் தார்கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும் ஓர் கூர்கொண்ட வேலும் மயிலும்.நற்
கோழிக் கொடியும் அருள் கார்கொண்ட வண்மைத் தணிகா
சலமும் என் கண்ணுற்றதே.
அவர் உள்ளத்தின் உவகை ஊற்றில் ஊறிப் பொங்கிய கவிதையில் ஒன்றே மேலே கண்டது. திருத்தணிகை வேலவன்பால் அன்றிலிருந்து ஆராத காதல் கொண்ட அடியவராய் இராமலிங்கர் ஆனார். எனவேதான்,