உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் மொழியின் வரலாறு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி]

தமிழ்மொழியின் வரலாறு

227

களும் உச்சாரண பேதங்களும் மிகவும் நிலைபே றுடையனவாம். இவ்விஷயம் பாஷை நூல்களிற் பெரிதும் முழங்குவதாகும்.

தமிழ்ப் பாஷையின் கண்ணேயுள்ள மொழிகளைப் பகுபதம் பாகாப்பதமென விருகூறாக்கி, அவற்றுட் பகுபதங்களைப் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்னும் ஆறுறுப்புக்களு ளடங்குமாறு பகுத்து முறைப்படுத்திருக்கும் நன்னூலாரது செயல், பாஷை நூலிற் கூறப்படும் மொழியாக்க முறையைப் பெரிதும் ஒட்டிச் செல்லுகின்றதெனினும் அவர் கூறிய பகாப்பத விலக்கணத்திலும் இடுகுறிப் பெயரிலக்கணத்திலும் ஆக்ஷேபிக்கத்தக்க அமிசங்களிருக்கின்றன. தமிழ்ப் பகுதிகளும் அவற்றினின்று சொல்லாகுமாறும் மிகவும் நேரிய ஒழுங்குள்ளனவாம். தமிழ்ப்பகுதிகளின் ஒழுங்கைக் குறித்துப் பிறிதோரிடத்திற் பேசுதல் கருதி, இப்போது அதை விடுத்து மேற்செல்லுகின்றாம்.

இனித் தமிழ்ச் சொற்களெல்லாம் வாக்கியத்தின் பகுதிகளாம். அவை நால்வகைய, பெயர் வினை இடை உரியென. பிறபாஷைகளிலுள்ள சொற்பாகுபாடுகளெல்லாம் இந்நான்கனு ளடங்குமென்க. இடைச் சொற்களும் உரிச்சொற்களும் முன்னொரு காலத்திற் பெயர் வினைகளா யிருந்தன. அவைகளனைத்துங் காலக்கிரமத்தில் அத்தன்மைக ளிழந்து இப்போதுள்ள இடையுரிப் பண்புகள் அடைவனவாயின. பெயரும் வினையும் முதனிலைகளாகிய தனிப் பகுதிகளினடியாகப் பிறந்தன. அம் மூலப் பகுதிகள் தாமுந் தனித்தனி வாக்கியங்களின் மரூஉக்களாம். எனவே வாக்கியங்கள் பகுதிகளாய்க் குறுகி முதனிலைத் தன்மைப்பட்டுத் தம்மினின்றும் பலசொற்களாக்கி அவற்றை மீட்டும் வாக்கியங்களில் தொடர்பு படுத்தனவென்பது கேட்போருக்கு நகை விளைப்பதோர் கூற்றேயாமாயினும் அது பாஷைநூல்வல்ல பண்டிதராயினார் யாவர்க்கும் ஒப்ப முடிந்ததோர் கோட்பாடேயாம்.

தமிழிலக்கண முடையார், பாலையும் எண்ணையும் வேறு வேறு கூறாது, இரண்டையும் ‘பால்’ என்ற ஒன்றிலே போற்றி, ‘ஆண், பெண், பலர், ஒன்று, பல’ என ஐம்பால் வகுத்தார். அவ் வகுப்பிலும் ஆண் பன்மைக்கும் பெண் பன்மைக்கும் வேறுபாடு காட்டாது ‘பலர்பால்’ என்றதன்கண் அடக்கினார். உயர்திணையிலாவது ஆணொருமை பெண்ணொருமை கொண்டார்; அஃறிணையில் அதுவுமில்லை. அஃறிணைப்பாற் பகுப்பெல்லாம் ஒருமைப் பன்மைகளேயாம், அஃறிணைச் சொற்களில் ஆண் பெண் பாகுபாடு பாஷை நடையிலிருக்கவும் அதனை யிலக்கண நூலுடையார் கவனியாது பராமுகமாய் சென்றது யாது காரணம் பற்றியோ?

“ஆண் பெண் பலரென முப்பாற் றுயர்திணை”
“ஒன்றே பலவென் றுருபாற் றஃறிணை”

என்ற பெயரியலிற் சூத்திரங்கள் வகுத்த நன்னூலார் தம்மையும் மறந்து,