பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

33


முதலிய மரக்கிளைகளுக்குப் பஞ்சமா? ஏணைகட்டி அதில் குழந்தையைப் படுக்கவைத்துத்', 'தாய் மார் தாலாட்டுகிறார்கள் என்று கற்பனை செய்கிறார் கவிஞர்; இது உண்மையில் கற்பனையே அன்று; மெய்யாகவே நடக்கிற நிகழ்ச்சிதான்.

இரண்டு பள்ளியர் தாலாட்டுகிறார்கள். ஒருத்தியின் குழந்தை ஆண் குழந்தை; மற்றவள் குழந்தை பெண் குழந்தை. எப்படித் தாலாட்டுகிறார்கள் என்பதை மாற்றி மாற்றிக் கேட்போம்.

பள்ளரும் பள்ளியரும், திருக்குருகூர் நம்மாழ்வாரிடத்தில் அளவற்ற பக்தியுடையவர்கள், பரம்பரையாக ஆழ்வார் பண்ணையில் பயிர்த்தொழில் செய்து வருபவர்கள் என்பதை நாம் ஞாம்பத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.

ஒருத்தி பாடுகிறாள் :

அண்டர்தொழுதென்குருகூர்
ஆழ்வார்க்கு வாய்த்த வயல்
எண்திசையும் பண்ணை பயிர்
ஏற்ற பிறந்தானோ!

அடுத்தவள் - பெண் குழந்தையை யுடையவள் - பாடுகிறாள் :

அன்னதருத் தென்குருகூர்
ஆழ்வார் வளவயலில்
செந்நெல் நடவந்த
செல்வ மகளாரோ!

ஆழ்வார் பண்ணையிலே தாங்கள் மகிழ்ச்சியோடு