பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 557 குளிர்ந்த கருணையையே பாலிக்கின்ற ஒப்பற்ற பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திரு முக அழகு வாய்ந்த பெ / (என்னையும் வழிபட விடவேணும்) 1233. (கிஞ்சுகம்) முருக்கு போலச் சிவந்த (தொண்டையள்) கொவ்வைக் கனியாம் ஆர். மிகவும் கருநிறங் கொண்ட கெண்டைமீன் போன்ற கண்ணினள், திணைப்புனங்காத்த மலைநிலப் பெண் (வள்ளி) யின் அதிக பாரமுள்ள. கிம்புரி (பூண்) அணிந்துள்ள (மருப்பு) யானையின் தந்தத்தை ஒத்ததும், குங்குமம் அணிந்ததுமான கொங்கையைக் கொண்ட குறத்தியின் (கிங்கரன்) ஏவலாள் - (வேலைக்காரன்) என (நீ) அடைந்த பெயரைப் புகழ்ந்து பேசி, நெஞ்சம் உருகி, ந்ெகிழ்ந்து நெகிழ்ந்து நின்று தொழுகின்ற (நிர்க்குணத்தர்) குணங்கடந்த பெரியோரும், பழிப்புக்கு இடம் தராத பக்தர்களும், வெட்சி மலரைத் துாவுகின்ற உனது திருவடியினைகளின் (ப்ரசித்தி) பெருங்கிர்த்தி முதலான ப்ரதாபங்களை நான் - வகுத்து உரைக்க வகைப்படுத்தி எடுத்துரைக்க, உனக்குப் பணி செய்யத் (தமிழ்த் திரயத்தை) முத்தமிழ் ஞானத்தை பாலித்து அருள்வாயாக கம்சன் ھئےWا னுப்பின நடத்தனமுள்ள (குஞ்சரம்) குவலயாபீடம் என்னும் யானையின் தந்தத்தை (ஒசித்த) முறித்த (கங்கனும்) கருடனை (வாகனமாகக்) கொண்ட திருமாலும், மதி - புத்தி (திகைக்க) கலங்க மத நீரைப் பொழிவதும், (கந்து) கட்டியுள்ள தறியையும், எ த்தெறியவல்லதுமான களிறு - யானையை (உரித்து) தோலை 鷺 வென்று - அழகிய நடனத்தைச் செய்த ஏகாம்பர மூர்த்தியும் மதிப்புடன் நோக்க உக்ரம் பொருந்திய கூரிய வேலாயுதத்தால், (சூரனுக்கு பயந்திருந்த (ஜகத்ரயத்தை மூவுலகை - மூவுல. கினரையும் அஞ்சாதீர்கள் என்று (விக்ரமித்து) பராக்ரமத்தைக் காட்டி, அன்பர்கள் புகழ்ந்து பாராட்டப் (பொருப்பொடு) கிரவுஞ்ச கிரியுடன் போர்புரிந்து அந்நாள் அசுரர்களை போர்க்களத்தில் ஜெயித்து, (உததியை) கடலைக் கலக்கித் தேவர்களின் சிறையை (வெட்டி விட்ட) நீக்கி வெளிவிடுத்த பெருமாளே! (தமிழ்த்ரயத்தை அருள்வாயே)