பக்கம்:தொல்காப்பியப் பொருளதிகார ஆய்வு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாடாளும் வேந்தனும் அவனொடு பொருந்திய குறுநில மன்னர் படைத்தலைவர் முதலிய ஏனையோரும், வேந்தனாற் சிறப்புச் செய்யப்பெற்று உயர்ந்தோரும் முறையே ஒதற்பிரிவு, பகைவயிற்பிரிவு, துதிற்பிரிவு, நாடுகாவற் பிரிவு ஆகியவற்றிற்கு உரியராதலையும், வேந்தர்க்கும் வேந்தரொடு பொருந்திய ஏனையோர்க்கும் உரியனவாகச் சொல்லப்பட்ட இப்பிரிவுகள் யாவும் நாணிலமக்களில் தலைவராயினோர்க்கும் உரியனவாதலையும் இந்நூற்பாக்களில் ஆசிரியர் தொல்காப்பியனார் விரித்துக் கூறியுள்ளமை காணலாம்.

   “அவற்றுள் ,
    ஒதலுந் துதும் உயர்த்தோன் மேன”

என வரும் நூற்பாவுக்கு, “மேற்கூறப்பட்டவற்றுள் ஒதல் காரணமாகப் பிரியும் பிரிவும், தூதாகிப் பிரியும் பிரிவும் நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர்க்கும் அரசர்க்கும் உரிய” என இளம்பூரணரும், “ஒதற் பிரிவும் துதிற் பிரிவும் அந்தணர் முதலிய மூவரிடத்தின” என நச்சினார்க்கினியரும் தம் காலத்தில் நிலவிய ஆரியவருணாச்சிரம நிலையினை உடன்பட்டு உரை வரைந்தனர். "நான்கு வருணம் ஆரியர் அறநூல்களே கூறும் வகைகளாதலானும், பண்டைத் தமிழருள் பிறப்பளவில் என்றும் உயர்வு தாழ்வுகளுடன் வேறுபடும் அந்நால்வகை வருணங்கள் உலகியலில் வழங்காமையானும், தொல்காப்பியர் தாம் தமிழ் மரபுகளையே கூறுவதாக வற்புறுத்தலானும், அகத்திணையியலில் தமிழ் நாட்டு நானில் மக்கள் குறிக்கப்படுகின்ற இன்றி நான்கு வருணத்தராய்த் தமிழ் மக்கள் யாண்டும் கூறப்படாமையானும் அவருடை அமைவுடையதன்று” என மறுத்த பாரதியார் ‘ஓதலுந் தூதும் உயர்ந்தோர்மேன" என வரும் நூற்பாவில் உயர்ந்தோர்’ எனக் குறிக்கப்பட்டவர்கள், முற்குறித்த அடியோர், வினைவலர், வைல் மரபின் ஏனோர் அல்லாத நானிலத் தமிழ்க்குடிமேன் மக்களே என்பதனை இந்நூற்பாவில் தெளிவாக விளக்கியுள்ளார். இனி,

 ‘மேலேர் முறைமை நால்வர்க்கும் உரித்தே'

எனவரும் நூற்பாவுக்கு, "மேலேராகிய தேவரது முறைமையை நிறுத்தற்குப் பிரியும் பிரிவு நான்கு வருணத்தார்க்கும் உரித்து”

i 111

'