உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லின் செல்வன்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

94g DIے
gol/9یے

இரா : (இரங்கி நோக்கி) உமக்கு உரிய துன்பங்கள் முன் நாள் சென்றன போக இனிமேல் வந்து உறுவன தீர்ப்பேன். இன்ப துன்பங்கள் அனைத்தும் எமக்கும் உமக்கும் நேர்; வானிடை மண்ணிடை உம்மைச் செற்றவர் என்னைச் செற்றார்; தீயரே எனினும் உம்மோடு உற்றவர் எனக்கும் உற்றார். உம் கிளை எனது; என் காதல் சுற்றம் உன் சுற்றம்; நீர் என் உயிர்த்துணைவர். (எழுந்து வாழ்த்துகின்றான்) ஆர்த்தது குரங்குச் சேனை. விண்ணோர் தூர்த்தனர் பூவின் மாரி அண் ணல் வார்த்தை மறையினும் மெய்யது; உயர்ந்தது. வாழ்க அவர் கூற்று. தூண் திரள் தடந்தோள் மைந்த தோழனும் நீயும் வாழி! ஈண்டு நீவிர் நம் கோயில் எய்தி இனிதின் நல் இருக்கை காண வேண்டும்; அருள் செய்து எழுக. விழுமிது அப்படியே ஆகுக, மண்ணும் விண்ணும் இருக்கும்வரை நம் நட்பு நிலைத்திருக்கும். வாழ்க நம் நட்பு. வாழ்க எம் தலைவர். காட்சி : 4 (சோலையில் சுக்கிரீவனும் இராமனும் பூவணையில் பொலிந்து அன்போடு அளவளாவுகின்றார்கள். கனியும் கிழங்கும் காயும் தூயன இனியன முன் வைக்கின்றான். இராமன் அவற்றைத் தின்று கொண்டே பேசுகின்றான்) - துணைவியின்றித் தனித்து உபசரிக்கின்றாயே! நீயும் மனைக்குரிய மனைவியை என்னைப் போல் பிரிந் துள்ளாயோ? (சுக்கிரீவன் பேசாதிருத்தல்) ஏன்