*136 முருகன் காட்சி
பொய்யா மரபின் ஊர்முது வேலன் கழங்குமெய்ப் படுத்துக் கன்னங் தூக்கி முருகென மொழியும்
-ஐங்குறுநூறு : 245: 1-3
இவ் முருக வழிபாடு ஆரவாரத்தோடு நிகழும். குழல் அகவும்; யாழ் முரலும்; முழவு அதிரும்; முரசு இயம்பும் *দের fo பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் குறிப்பிட்டுள்ளார்:
செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறியாடு மகளிரோடு செறியத் தாஅய்க்
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப விழவறா வியலாவணத்து.
-பட்டினப்பாலை . 154.158
இம்முறையில் பழந்தமிழர் பண்பாட்டோடு.நம்பிக்கை யோடு முருகனுக்கு விழாவெடுத்தனர்.
தேவேந்திரன் தர தேவசேனையைக் கற்பு மணம் புரிந்த முருகன், தினைப்புன மாது வள்ளியைத் தாமே விரும்பிக் களவு மனங்கொண்டு கற்பில் தலைப்படுகின்றார். * யான் எனது அற்ற அடியவரிடம் இறைவன் தானே வந்து நல்குவான்’ என்ற உயரிய தத்துவத்தை வள்ளித்திருமணம் விளக்குகிறது என்பர் பெரியர். எனவே தேவசேனையைக் .கிரியா சக்தி’ என்றும், வள்ளியை இச்சா சக்தி’ என்றும், வேலினை ஞானசக்தி’ என்றும் கூறுவர். இது போன்றே மயிலினை ஆணவம் என்றும், கோழியினைச் சிவஞானம் என்றும்; மயிலாகிய ஆணவத்தினை அடக்கித் தான் அமரும் வாகனமாக்கிக் கோழியாகிய சிவஞானத்தைக் கொடியாக உயர்த்தித் தன் கையில் பிடித்துள்ளார் முருகப்பெருமான் என்பர் அறிஞர். முருகனுக்குச் சிறந்த படையாக விளங்கு வது வேலாயுதமாகும். எனவே பெரியோர் விழிக்குத்