உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகன் காட்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருணகிரிநாதர் காட்டும் முருகன் 107

கும்பகோணம், சுவாமிமலை முதலாய பல திருத்தலங் களைத் தரிசித்து, நாமணக்கும் தமிழில் நல்ல திருப்புகழ்ப் பாடல்களைப் பாடினார். சுவாமிமலையில் பாடிய பாடல் களில் இரண்டு அடிகள் நினைவிற் கொள்ளத் தக்கன. அவை வருமாறு :

பதினாலு லகத்தினில் உற்றுறு பத்தர்கள் ஏதுநினைத்தது மெத்த அளித்தருள் இளையோனே!

-திருப்புகழ் : 197 சுராதிபதி மாலயனு மாலொடு சலாமிடு சுவாமிமலை வாழும் பெருமாளே!

-திருப்புகழ் : 207 இவ்வாறு பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டே அருணகிரியார் தரிசித்த தலங்களின் எண்ணிக்கை மிகப் பலவாகும். அவர் பாத துளி படாத தலமே இல்லை யெனலாம். அவர் திருப்புகழ் பெறாத திருப்பதிகள் ஏதும் இல்லை. திருச்செங்கோட்டின் மலைமீது அமர்ந்துறையும் திருமுருகனைத் தம் இரு கண்ணாரக் கண்டு களித்தார் அருணகிரியார். பின் பாடிப் பரவசமுற்றார். தனக்குப் பிரமன் நாலாயிரம் கண் நல்க வில்லையே என வருந்தினார். அக் கந்தர் அலங்காரப் பாடல் வருமாறு :

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு

(தொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.

-கந்தர் அலங்காரம் : 90 வில்லிபுத்துார ரொடு வாதிட்டு வென்று அவர் காதினை அறுக்காமல் விட்டு அவருக்கு அருள் செய்தார் என்ற செய்தியும், அவர் அதுபோது பாடிய பாட்டு கந்தரந் தாதியில் வரும் தி தித்த எனத் தொடங்கும் பாடலாகும் என்றும் கூறுவர். இப்பாடலுக்குப் பொருள் கூற முடியாமல் வில்லிபுத்துாரார் விழித்தாராம். வில்லிபுத்துாரார்தம்