ராஜம் கிருஷ்ணன்
69
தன்னைக் குதறிக் குதறிப் போட்டுக்கொண்டாலும் மைத்ரேயிக்கு அந்த அருவருப்புத் தொலையாது போலிருக்கிறது.
கிணற்றின் கரையில் நின்று அவள் தண்ணீரை இழுத்து இழுத்துக் கொட்டிக் கொள்கிறாள். துணிகளை அறைந்து அறைந்து துவைக்கிறாள். தன் ஏமாற்றம், தோல்வி, அச்சம், அருவருப்பு எல்லாவற்றையும் அத்தகைய புறச்செயல்களால் துடைத்துக் கொள்ள முயலுகிறாள்.
பையிலிருந்து வேறொரு பழைய செட் உடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.
ஈர உடைகளை உலர்த்தலாம் என்று வாயிலுக்கு வருகையில் அங்கே அத்தான், அவளுக்கு அத்திம்பேராகவே உரிமையும் பாசமும் எட்டாத தொலைவிலேயே நின்றுவிடும் அக்காளின் கணவர் வந்து கொண்டிருக்கிறார்.
அவளைக் கண்டதும் விழிகள் கூர்மையாகின்றன.
“நீ.எதுக்காக இங்கே வந்தே?” அவள் கை ஈரத்துணிகளைக் கெட்டியாகப் பற்றிக் கொள்கிறது.
“எதுக்காக நீ இங்கே வந்தேன்னு கேட்டேன்!”
குரல் உச்சத்துக்கு ஏறுகிறது; கனற்பொறிகள் பறக்கின்றன.
துடிக்கும் இதழைப் பல்லால் கடித்துக்கொண்டு காற்பெருவிரலால் நிலத்தில் கோலமிடுகிறாள்.
‘உனக்கு அன்னிக்கே உங்கக்கா ஸ்நானம் பண்ணியாச்சே. இங்கே யார் உறவு உனக்கு ?”
“என்னை மன்னிச்சுக்குங்க. நான் தப்பா நடந்துட்டேன். உங்க குழந்தை மாதிரி நினைச்சு நீங்க மன்னிக்கணும். நான் சத்தியமாச் சொல்றேன். அப்ப எனக்கு மூளை குழம்பி இருந்தது; பைத்தியம் பிடிச்சிருந்தது. நான் மீண்டு வந்துட்டேன் என்னைப் போன்னு சொல்லிடாதேங்கோ அத்திம்