பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 467 அன்னத்தின் நடையையும் பழிக்கவல்ல (நடையை உடைய) (மஞ்ஞை மயில் அனையவள், மலையில் வளர்ந்த குறமங்கை தேவி, காட்டிலும் திணைப்புனத்திலும் விளையாடின தாய் ஆகிய வள்ளி - அழுத்தி அணைத்த பன்னிரு திருக்கரங்களால், அயலாராய் மாறுபட்டிருந்த அரக்கர்கள் அனைவர்களும் இறக்கும்படி வைத்துப் பொன்னுலகைத் (தேவர்கள் உலகைக்) காத்தளித்த (மன்ன) அரசே! நல்ல சிவ விரத அருட்டானத்திலிருந்ததைக் க்ைவிட்ட இழி குணத்தோராய்த் திரிபுரங்களில் வாழ்ந்திருந்தவர்களாகிய அசுரர்கள் பொடிபட்டழியப், (பொன் மலை மேருவை வில்லாக வளைத்து எரித்த நெற்றிக் கண்ணராம் சிவபிரான து இடது பாகத்தில் இருக்கும் புண்ணிய தேவியாக ஒருத்தி - பார்வதி பெற்ற பெருமாளே! (ஷண்முக நினைக்க வைத்த (தை மறவேனே) 1190. முத்த மாலை உலவுகின்ற கொங்கைகளை உடைவர்கள், (சித்தசன்) மன்மதனுடைய (ஆணை) கட்டளைகளை (செலுத்திகள்) நடத்துபவர்கள் (முத்தம் இடா) முத்தம் தந்து (மன்) நன்றாக, உருக்கிகள் மனத்தை உருக்குபவர்கள், இளையோர்களிடத்தில் - (முட்ட உலாவி) நன்றாகக் கலந்து நடந்து அவர்களை மயங்கச் செய்பவர்கள், (நெட்டிலை) நீண்ட இலையை ஒத்த வேலை நிகர்க்கும் கண்களை உடையவர்கள், முப்பது கோடிக்கணக்கான (மனத்தியர்) எண்ணங்களை உடையவர்கள், காமப்பற்றை விளைக்கும் (தத்தைகள்) கிளி போன்றவர்கள், ஆசை விதத்தியர் - ஆசைகளைக் காட்டுபவர்கள், பச்சைக் கற்பூரம் அளாவிய தோள்களொடு மினுக்குபவர்கள், (தப்புறும் ஆறு அகம்) தப்பான வழியிற் செல்லும் மனத்துடன் (எத்திகள்) வஞ்சிப்பவர்கள் (அளவே) இடத்திலே நான் (தட்டழியாது) நிலை குலையாது - திகைக்காமல், (உனது) திருப்புகழைக் கற்பதற்கும் ஒதுதற்கும் வேண்டிய முத்தமிழ் ஞானத்தை (தத்துவ ஞானத்தை) உண்மை ஞானத்தை எனக்கு அருள் புரிவாயாக