பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 439 ஆசையாகிய (பாரவாரமும்) கடலை (ஏறுகின்றிலன்) தாண்டி ஏறுகின்றேன் இல்லை; நானாபேத பலவிதப்பட்ட அனேகமான, (தந்த்ர க்ரியா) - சாத்திர மந்திரகிரியைகளைக் கூறும்வேத ஆகம ΑΕΤΙΤΚ: ΠΑΕΕ&ΥΤΙΤΙΙΙ கடலின் கரையையும் காணேன். (உனது சிலம்பணிந்த திருவடித் தாமரையை (ஓதேன்) ஒதிப்போற்றுகின்றேன் இல்லை; (நேசிலன்) (நேசம்) அன்பும் இல்லாதவன்; ஆயினும், குரு மூர்த்தியே! நீ அருள் புரிவாயாக இந்திரனுடைய остгr பாழாகாதபடியும், ( நிசாசரன்) அசுரனாம் சூரனது குலம் வாழாமல் அடியோடு மாண்டு போகவும், (வன்கிரி) வலிமைவாய்ந்த கிரவுஞ்சகிரி பிளவு படவும், (நெடுநேமி நீறெழ) நீண்ட சக்ரவாளகிரி பொடிபடவும் திருமால் பெற்ற பிரமனும், அலைமோதி வீசும் தெள்ளிய கடலும் (கோகோகோ என) கோகோ என்று அஞ்சி அரற்றவும் (ஒலி செய்யவும்) (சூரனாம் மா மாமரம் முறிபட்டு விழவும், நீண்ட வேலாயுதத்தைச் செலுத்தின இளையவனே! "வீசும் தென்றல் காற்றும், மன்மதனுடைய மலர்ப்பாணங். களும் (மீறுகின்றமை ஆமோ!) (என் பொறுமைக்கு மேற்பட்டு வேலை செய்தல் (என்னை வாட்டுதல்) நன்றா இந்த காம தாகம் ஒழியும்படிக் காத்தருளுக என்னுடைய ஆவியை" என்று னைப்புனம் உள்ள (அந்த) இடத்தே சென்று. (வள்ளியுடன்) (உறவாடா) உறவாடி, வேடுவர் மகளாம் அவளது கொங்கையின் மீது மோகம் பூண்டு, (வேடை கொண்ட) வேட்கை - விருப்பம்கொண்ட பெரும்ாளே! தேவர்கள் பெருமாளே! (அருள் புரிவாயே) 1181. (பொங்கும்) கோபித்து எழும் பொல்லாத யமனையும், (நஞ்சும்) விஷத்தையும் (தன்னிடத்தே கொண்ட) (நேத்திர வல்ையை), (பொதுவில் நோக்கிய) வித்தியாசமின்றி யாரிடத்தும் விருப்பம் கொள்ளும் நேத்திர வலையை, (பொங்கும் விளங்கும் நேத்திரவ்லையை, (புதிய) புதுமைவாய்ந்த நேத்திரவலையை விசி (பொன் கண்டு) பொற்காசுகளைப்பார்த்து (இளகு மன நெகிழ்ச்சி கொள்ளும் (கூத்திகள்) நாடகக் கணிகையரின் புன்கண் துன்பத்தைத் தரும் (கலவி வேட்டு) புணர்ச்சியை விரும்பி, உயிர் புண்பட்டு மனம் உருகி (அந்தப் பெண்களுக்கு) ஆளாகின்ற ARJTLD மயக்கம் ஒழிய (நான்)