பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாலாட்டுப்பாடல்கள்

45


கேட்டல், கண் வளரச் சொல்லுதல் - ஆகிய பகுதிகளைப்பின்வரும் வரிகளில் காணலாம்.)

கானாற் கரியானோ கண்மூன்றுடையானோ
தாணுவோ சங்கரனோ சச்சிதானந்தனோ?

சாதி மதத்தாலும் சமய மதத்தாலும்
கோதிலா வானந்தம் கூடஅரிதென்றாரோ?

எல்லா உயிரும் எனதுயிலே என்றுரைத்து
நல்லார் இனத்தில் நடித்தானைச் சொன்னாரார்?

இன்னவடிவின்னநிறம் இன்னபடி என்றறியாது
உன்னம் இடத்தில் உதித்தானைச் சொன்னாரோ?

வையம் வளர மறையோர் தொழில்வளர
மெய்யும் வளர அருள் மேகமே கண்வளரீர்.


2. தத்துவராயர் தாலாட்டு :

(15ஆம் நூற்றாண்டு. 51 கண்ணிகள். தம் குருவாகிய சொருபானந்தர் துதியாகத் தத்துவராய சுவாமிகள் பாடியது)

நஞ்சேய் பிறவிக்கு நாயேன் நடுங்காமல்
அஞ்சேலஞ் சேலன் றருளும் பெருமானோ?

ஆவா இருவர் அறியாத சேவடியை
வாவாஎன் றென்தலைமேல் வைக்கும்
பெருமானோ?

கண்ட இருளைநீ காணாதே அவ்விருளைக்
கண்ட அறிவைநீ காணென்று சொன்னாரோ!